“RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார் ” – நடிகை ஊர்வசி

cinema news

இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக போற்றப்படும் நடிகை ஊர்வசியின் பங்கு, அவர் நடிக்கும் திரைப்படங்களின் மதிப்பை உயர்த்துகிறது. குறிப்பாக, படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்தால், பார்வையாளர்களின் இதயங்களிலும் மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு நடிப்பை வெளிப்படுத்தி முழுத் திரையையும் ஆட்கொண்டுவிடுவார். ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக இருக்கும் RJ பாலாஜி நடித்த “வீட்ல விசேஷம்” திரைப்படத்தில் அத்தகைய ஒரு பாத்திரத்தில் அவர் மீண்டும் நடித்துள்ளார்.
இது குறித்து நடிகை ஊர்வசி கூறியதாவது..,
“வீட்ல விசேஷம் திரைப்படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்தது. மிகவும் அரிதாகவே, ஒரு கலைஞருக்கு மதிப்புமிக்க கதை, தெளிவான பார்வை கொண்ட  நல்ல திரைப்பட இயக்குநர்கள் மற்றும் அற்புதமான சக நடிகர்கள் கொண்ட ஒரு படம் கிடைக்கிறது. இந்தப் படம் எனக்கு அப்படிப்பட்ட ஒரு படமாக அமைந்தது. நான் மலையாளத்தில் இதே போன்ற திரைப்படங்களை செய்திருந்தாலும், இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, இந்த படத்தினுடைய படப்பிடிப்பின் ஒவ்வொரு நொடியும் என்னை உற்சாகப்படுத்தியது. சத்யராஜ் சாருடன் திரையை பகிரும் வாய்ப்பு ஒரு முக்கியமான காரணம். நல்ல நடத்தை மற்றும் நடிப்பின் மூலமாக மற்றவ்ர்களை ஈர்க்கும் திறமை பெற்ற  நடிகர்களுடன்பணியாற்றுவதை நான் எப்போதும் ரசிப்பேன், அப்படிபட்ட ஒரு நடிகர் சத்யராஜ். இது எனது பாத்திரத்தையும் சிறப்பாக வழங்க உதவியது. நான் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், RJ  பாலாஜி தான், அவருடைய படங்களில் எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க, தனித்துவமான பாத்திரம் கிடைக்கும். RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், மேலும் அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார். RJ .பாலாஜி ஜாலியாகவும் துடிப்பாகவும் இருக்கும் போது, NJ .சரவணன் அமைதியாகவும், இறுதி வெளியீட்டைப் பெறுவதில் கெட்டிகாரராகவும் இருக்கிறார். திரைப்பட இயக்குநர்களின் இந்த கலவையானது படப்பிடிப்பின் போது குழுவில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் நிலைமையை சமாமாக வைத்துக்கொண்டது.
வீட்ல விசேஷம் படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு கிடைக்க போகும் அனுபவங்களை பற்றி ஊர்வசி கூறும்போது, “சமீப காலமாக, ஒரு குறிப்பிட்ட குழுவினரின் ஆர்வத்தையும் ரசனையையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். இருப்பினும், வீட்ல விசேஷம் திரையரங்குகளில் அனைவரையும் மகிழ்விக்கும் மற்றும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்” என கூறினார்.

வீட்ல விசேஷம் படத்தை RJ பாலாஜி-NJ சரவணன் இயக்கியுள்ளனர் மற்றும் Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர், Romeo Pictures இணைந்து தயாரித்துள்ளனர். இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பதாய் ஹோ’  படத்தின் ரீமேக்கான இப்படத்தில் RJ .பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.