இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த ஹாலிவுட் திரைப்படம்..!

cinema news

Universal Pictures ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’(Jurassic World Dominion) ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இயக்குனர் கொலின் ட்ரெவோரோவின் திரைப்படமான ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ ஜூன் 10 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி,  வெற்றி பெற்றது மற்றும் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும்  உலகம் முழுவதிலும் இப்படத்திற்கு  பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது ஜுராசிக் வேர்ல்ட் தொடரின் மூன்றாவது பாகம் மற்றும் ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின் ஆறாவது திரைப்படமாகும்.
Jurassic World Dominion Legacy Featurette and New Poster!

 மற்ற பல படங்களின் பலத்த போட்டி இருந்தபோதிலும், ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து கலக்கி வருகிறது , இப்படம்  இந்தியாவில் #1  இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.  ஆரம்ப வார இறுதியில் படம் 46 கோடி ரூபாய் வசூலித்தது, வரும் நாட்களில் இந்த வசூல் இன்னும் உயரும் . ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில், திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் எண்கள் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது மேலும்  ஏற்கனவே 2022 ஆம் ஆண்டில் நாட்டில் மிகப்பெரிய வெளியீடாக இத்திரைப்படம் சாதனை படைத்துள்ளது!

இது ஜுராசிக் வேர்ல்ட் தொடரின் மூன்றாவது பாகம் மற்றும் ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின்  ஆறாவது திரைப்படமாகும். அசல் திரைப்படத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், சாம் நீல், லாரா டெர்ன் மற்றும் ஜெஃப் கோல்ட்ப்ளம் ஆகியோர் முதல் ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் நடித்த, தங்கள் பாத்திரங்களில் மீண்டும் தோன்றியுள்ளனர். டொமினியன் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கி வரும் இப்படம் உலகம் முழுவதிலும் பல சாதனைகள் படைத்து வருவது குறிப்பிடதக்கது.