இப்படத்தை,கணேஷ் சந்திரசேகர் இயக்கி தனது ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். தயாரிப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்கிரீன் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இருக்கிறது.இப்படத்திற்கு பெங்களூரைச் சேர்ந்த ஹரீஷ் ஜிண்டே ஒளிப்பதிவு செய்துள்ளார்.என்.வி. முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார் .ஆனந்த் மற்றும் உன்னி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ளனர்.
ஏற்றுமதி வணிகத்தில் இறங்கி உழைப்பால் வெற்றிப் படிகளில் ஏறி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் கணேஷ் சந்திரசேகருக்கு சினிமா மீது அளவற்ற காதல்.
“செஞ்சி என்கிறபோது செஞ்சிக்கோட்டை நினைவிற்கு வருகிறது. செஞ்சி என்றாலே அதில் உள்ள மர்மங்களும் புதைக்கப்பட்ட வரலாற்று அதிசயங்களும் நினைவிற்கு வரும். அதனால்தான் அதை நினைவூட்டும் வகையில் செஞ்சி என்று படத்திற்குப் பெயர் வைத்திருக்கிறோம்.
செஞ்சிக்கோட்டை பற்றி வரலாற்றுக்கு முன்பிருந்தே பேசப்பட்டு வருகிறது. பல்வேறு மன்னர்கள் செஞ்சி மீது படையெடுத்து உள்ளார்கள். மராட்டியர்கள், பீஜப்பூர் சுல்தான் போன்றவர்களின் பல படையெடுப்புகளை அந்தக் கோட்டை சந்தித்துள்ளது .அதற்குப் பின்னே ஏதோ செல்வங்களும் பொக்கிஷங்களும் இருந்திருக்க வேண்டும். இந்த அனுமானத்தைக் கற்பனை ஆக்கி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம் .அதாவது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதையல் இருக்கிற இடம் பற்றிய ரகசியத்தை அறியும் குறிப்புகள் இக்கால மனிதர்களுக்குக் கிடைக்கிறது. கால மாற்றங்களுக்குப் பிறகு இவர்கள் அடைந்திருக்கும் அறிவால் அதை அறிய முடிகிறதா?அந்தப் புதையல் என்ன? என்று அந்தப் பொக்கிஷம் தேடிச் செல்கிற பயணத்தில் பல திடுக்கிடும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன .அதுதான் இந்தப் படத்தின் கதை.
நாம் நம் பழைய பாரம்பரியச் சின்னங்களை, வரலாற்றுச் சுவடுகளைப் புரட்டிப் பார்த்தால் இதெல்லாம் மனிதர்கள் செய்துள்ளவைதானா என்று இப்போது கூட பிரமிக்க வைக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில்தான் இந்தப் புதையல் தேடிய பயணத்தில் கதையை அமைத்தேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றுக் கொள்ளாதவன். ஆனால் எனது இரண்டாவது கல்வியே சினிமாதான் என்கிற அளவிற்கு சினிமாவைப் படித்துக்கொண்டுவருபவன் அந்த வகையில இந்த கதையை உருவாக்கி இருக்கிறேன் .
நான் என் ஏற்றுமதி வியாபாரம் உலகில் 64 நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். நான் பல ஹாலிவுட் நட்சத்திரங்களை, இயக்குநர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களை வைத்துப் படம் எடுக்க முடியும் .ஆனால் அதற்கு முன்பே ஒரு அனுபவம் வேண்டும். அதற்காகத்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.
கடற்கரை ,பூங்கா, உணவு விடுதி போன்ற இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது போன்ற மகிழ்ச்சிகரமான அனுபவத்தை இந்த செஞ்சி திரைப்படம் உங்களுக்கு வழங்கும்.