ரத்த தானம் செய்ய புதிய செயலியை கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கம்

cinema news

இளைஞர்கள் சக்தியை பயனுள்ளதாக மாற்றும் விதமாகத்தான் தளபதி விஜய்யின் ரசிகர்கள், விஜய் அகில இந்திய நற்பணி இயக்கம் மூலமாக தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டப் உதவிகளை செய்து வருகின்றனர்.

அடித்தட்டு மக்களுக்கு உணவுப்பொருட்கள், அவர்கள் வாழ்வாதாரத்திற்கான தையல் மிஷின், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவி என தேவைப்படுவோருக்கு தேவையான உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி என்..ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி உரிய நேரத்தில் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தால் தொடங்கப்பட்டுள்ள புதிய முன்னெடுப்பு தான் ‘தளபதி விஜய் குருதியகம்’.. ஆம்.. தானத்தில் சிறந்தது ரத்த தானம் என்பார்கள்.. அந்த ரத்த தானம் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் புதிய வழிமுறை தான் இந்த ‘தளபதி விஜய் குருதியகம்’..
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் பலர் உரிய நேரத்தில் தேவைப்படும் ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த நிகழ்வுகள் பல உண்டு. இந்த நிலை இனியும் தொடரக்கூடாது என்கிற விதமாகத்தான் ‘தளபதி விஜய் குருதியகம்’ என்கிற செயலியை (Mobile App) உருவாக்கியுள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினர்.

இந்த செயலி மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ரத்த தான சேவையை வழங்க இருக்கிறார்கள்.

ரத்த தானம் வழங்க முன்வருவோர் தங்களை இணைத்து கொள்ளவும் ரத்தம் தேவைப்படும் பயனாளிகள் பெற்றுக்கொள்ளவும் உறுதுணையாக இருக்கும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.