Mas Cinemas சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K.தாமரைசெல்வன் இயக்கத்தில், காதலையும், நட்பையும் மையமாக கொண்டு, சமூக அவலங்களை சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “நதி”. அனைத்து பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
“இந்த படத்தின் மூலம் கரு பழனியப்பன் போன்ற ஒரு சகோதரர் எனக்கு கிடைத்துள்ளார். இயக்குநர் எந்தவித பதட்டமும் இல்லாமல், படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் எனக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் நன்றி”
“AP International உடன் இந்த படத்தை இணைந்து தயாரிப்பாளர் வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கயல் ஆனந்தி திரையில் குடும்ப பாங்கான பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் தாமரைசெல்வன் வேலை பார்க்கும் விதம் இயக்குநர் பாசில் உடைய பாணியில் இருக்கிறது. கோடங்கி இந்த படத்தில் முழுமையாக ஒரு நல்ல பாத்திரத்தில் வருகிறார், அவர் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்கும் படி இருக்கும். இப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும்.”
“படத்தின் கதையை பற்றி கூறும் போது, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தயங்கியபடி கூறினார். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தான் எனக்கு அதிக விருப்பம். வில்லனாக நடிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் பேச முடியும். நல்லவனாக நடிக்கும் போது அது முடியாது. அதனால் எனக்கு வில்லனாக நடிப்பது பிடிக்கும். இயக்குநர் குழப்பமே இல்லாமல், தெளிவாக படத்தை உருவாக்கி முடித்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் சிறந்த படைப்பை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் இண்டர்வல் நிச்சயமாக எல்லோரும் ஆச்சர்யப்படும் ஒன்றாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பிரபு அவர்களுடைய பணி படத்தின் கதையை விட்டு நகராமல் இருக்கும். இந்த படக்குழு இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தை உடனே உருவாக்க வேண்டும். ஆனந்தி படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்தி உடைய கதாபாத்திரம் இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்படும். இந்த படம் கண்டிப்பாக கவனிக்கப்படும், படத்தில் உள்ள அனைவரும் பாராட்டப்படுவார்கள். அனைவருக்கும் நன்றி”
“நான் அறிமுகமாகும் படம் ஆழமாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டு இருந்தேன். இயக்குநர் எனக்கு இந்த கதை சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்தது. ஒளிப்பதிவாளர் பிரபு சார் இந்த படத்திற்கு முதுகெலும்பாக இருந்தார், அவர் இப்படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். ஆனந்தி கதையை கேட்டவுடன் நடிக்க ஒத்துகொண்டார். கரு பழனியப்பன் சார் இந்த படத்திற்குள் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தின் கதைக்காக முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
“இந்த படத்தை உருவாக்கும் போது ஒரு தெளிவு இயக்குநரிடம் இருந்தது. அவர் முழு அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்”
நடிகர்கள்: சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, கரு பழனியப்பன், முனிஷ்காந்த்