1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த சிவாங்கியின் தீவானா பாடல்

cinema news
இன்ஸ்டாகிராமின் புதிய ட்ரெண்ட் ‘#1MinMusic’ , ரீல்ஸ் வடிவத்துடன் இசை வீடியோக்களை வெளியிட படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்துள்ளது.
ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்குப் இன்ஸ்டாகிராம் பிரத்தியேகமாக அதன் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு #1MinMusic’, இதில் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுவருகிறார்கள். இன்ஸ்டாகிராம் தமிழுக்காக Silver Tree இணைந்து 25 கலைஞர்களுடன் பணியாற்றுகிறது.
அந்த வரிசையில் பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகை சிவாங்கியினுடைய  ‘தீவானா’  என்ற #1MinMusic சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலை அனி வீ இசையமைத்துள்ளார். சிவாங்கி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வைராலாகி வருகிறது.