பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி நடிகர் விஷ்ணு விஷால் & இயக்குநர் ராம்குமார் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம்

cinema news
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு எண்ணற்ற பிளாக்பஸ்டர் மற்றும் விருதுகள் பெற்ற திரைப்படங்களை வெளியிட்டு நம்பமுடியாத சாதனை படைத்துள்ளது. திரு. T.G. தியாகராஜன் 20 க்கும் மேற்பட்ட மாநில அரசு வென்ற படங்கள் மற்றும் 4 தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் ‘வீரன்’ மற்றும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றான ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய திரைப்படங்கள்  உருவாக்கத்தில் உள்ளன. கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார், தெலுங்கு இண்டஸ்ட்ரியின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன், அழகு தேவதை நடிகை பிரியங்கா அருள் மோகன் மற்றும் பல உச்ச நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பிளாக்பஸ்டர் காம்போவாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் திரைப்பட இயக்குநர் ராம் குமார் ஆகியோரின் கூட்டணியில் தங்களது அடுத்த தயாரிப்பை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த ஜோடி முன்னதாக ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்கள் மூலம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைக் குவித்துள்ளது. இவர்களது முந்தைய திரைப்படங்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தது. முற்றிலும் புத்தம் புதிய களத்தில் புதுமையான திரைக்கதையில் அசத்திய  ‘ராட்சசன்’ படம் இந்தியாவெங்கும் பல மொழிகளில் ரீமேக் செய்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் வெற்றிகரமான நாயகனாக வலம் வருகிறார்.  தொடர் வெற்றியைத் தரும் திரைப்படங்களைத் தருவதன் மூலம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களால் மிகவும் மதிப்புமிக்க  நட்சத்திரமாகப் பாராட்டப்படுகிறார் .
இயக்குநர் ராம் குமார் திரையில் தனித்துவமான உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதைகளைப் படைத்து வெற்றி பெற்றுள்ளார். அவரது முதல் இயக்கமான  ‘முண்டாசுப்பட்டி’ நகைச்சுவை திரைப்படமாக இருந்தபோதிலும், அவர் தனது இரண்டாவது திரைப்படமான ‘ராட்சசன்’ மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், அப்படம் இதயத்தை அதிரச்செய்யும் உளவியல் திரில்லராக அசத்தியது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் அவர்களின் பழைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேறு வகை ஜானரில் ஒரு புதிய படைப்பை உருவாக்குவதில் இந்த கூட்டணியுடன் இணைவதில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் மகிழ்ச்சி கொள்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம், பெரிய பட்ஜெட்டில் நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையை ஃபேண்டஸி கலந்து சொல்லும் படமாக இருக்கும். இந்த வெற்றிகரமான காம்போவின் இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், இந்த படம் அதன் ஹாட்ரிக் ஸ்பெல்லை நிறைவு செய்யும் என்பது உறுதி. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.
 
படத்தின் படப்பிடிப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.