full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

மெய்ப்பட செய் – Movie Review

தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ஆதவ் பாலாஜியும், நாயகி மதுனிகாவும் காதலிக்கிறார்கள். இவர்களுடைய காதலுக்கு நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வனால் பிரச்சனை வருகிறது. இதனால் காதல் ஜோடி திருமணம் செய்துக்கொண்டு மூன்று நண்பர்களுடன் ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் இவர்கள், அந்த வீட்டினால் பெரிய பிரச்சனையில் சிக்குகிறார்கள். இறுதியில், பிரச்சனையில் இருந்து அவர்கள் மீண்டார்களா? நண்பர்களுக்கு வந்த பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜி, முதல் படம் போல் இல்லாமல் காதல், செண்டிமெண்ட், சண்டைக்காட்சி என அனைத்திலும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். நாயகி மதுனிகா வசீகரிக்கும் அழகாலும், நடிப்பாலும் கவனிக்க வைத்து இருக்கிறார்.நாயகியின் தாய்மாமன் வேடத்தில் நடித்திருக்கும் பி.ஆர்.தமிழ் செல்வம், வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஆடுகளம் ஜெயபால் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய தோற்றமும், வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கொடுப்பதோடு, மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் வேலன். சொல்ல வந்த கருத்தை, தெளிவாக சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.வேல், காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை ரசிக்கும்படியும், சண்டைக்காட்சிகளை மிரட்டலாகவும் காட்சிப்படுத்தியுள்ளார். பரணியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.