பருந்தாகுது ஊர்க்குருவி – Movie Review

movie review

சிறு சிறு தவறுகளையும், அடிதடி திருட்டு செய்துவிட்டு சுற்றித் திரிந்து வருபவர் நிஷாந்த் ரூசோ. ஒரு சம்பவத்தில் போலீசிடம் சிக்கிக் கொண்டு காவல் நிலையத்தில் இருக்கிறார். அப்போது காட்டில் ஒரு கொலை சம்பவம் நடக்கிறது. போலீசுக்கு அந்த இடத்திற்கு செல்ல வழி தெரியாததால் நிஷாந்தை பயன்படுத்தி அந்த இடத்திற்கு செல்ல போலீஸ் முயல்கிறது.போலீசுக்கு வழிகாட்டி கூட்டி செல்லும் நிஷாந்தை, அந்த கொலை செய்யபட்ட நபரின் கையுடன் இணைத்து விலங்கு போட்டு வடுகின்றனர். இறந்து போன நபர் திடிரென உயிருடன் எழுந்துக் கொள்கிறார். அவரின் தொலைபேசியில் யாரோ ஒரு பெண் இறந்து போன விவேக் பிரசன்னாவை காப்பாற்றும் படி கேட்கிறார்.அதன்பின் விவேக் பிரசன்னாவை காப்பாற்ற முயற்சிக்க அதற்குள் கொலை செய்த நபர்கள் அந்த இடத்திற்கு வந்துவிடுகின்றனர். இறுதியில் அந்த கும்பலிடம் இருந்து நிஷாந்த், விவேக் பிரசன்னாவை காப்பாற்றுகிறாரா? எதனால் விவேக் பிரசன்னா கொலை செய்யப்படுகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பருந்தாகுது ஊர்குருவி: காட்டுக்குள் நடக்கும் ஒரு நாள் சம்பவம் | Dinamalar

படத்தை தாங்கி பிடிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா அவரின் எதார்த்த நடிப்பை கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார். நிஷாந்த் ரூசோ, ராட்சசன் வினோத் உள்ளிட்ட தெரிந்த நடிகர்கள் அவர்களின் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். பிற கதாப்பாத்திரத்தில் தோன்றும் நடிகர்கள் நடிக்க தவறியிருக்கிறார்கள். கதாநாயகி காயத்ரி ஐயருக்கும் விவேக் பிரசன்னாவிற்குமான காட்சிகளில் நடிப்பு எதார்த்த மீறல்களாக உள்ளது.

Parundhaaguthu Oor Kuruvi Movie Review: Parunthagudhu Oorkuruvi tries hard to fly with clipped wings

படத்தின் ஆரம்ப காட்சியின் மூலம் பார்வையாளர்களை பயமுறுத்துகிறார் இயக்குனர் கோ.தனபாலன். அதன்பின் படத்தின் விறுவிறுப்பு குறைந்துள்ளது. வித்யாசமான கதையை தேர்ந்தெடுத்தாலும் படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்தவில்லை. கதாப்பாத்திரத்தின் தன்மை எல்லை மீறுவதாக தோன்றுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் இயக்குனர் என்ன கூறவருகிறார் என்பதை புரிந்துக் கொள்ள முடியவில்லை.காட்டில் நடக்கும் காட்சிகள், இருட்டில் நடப்பது போன்ற காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் அஷ்வின் நோவெல். படத்திற்கு பலமாக ரஞ்சித் உன்னியின் பின்னணி இசை அமைந்துள்ளது. பாடல்கள் மனதில் படியும்படி இல்லையென்றாலும் கேட்கும் ரகம்.