விக்ரம் சுகுமாரன் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். நடிகராகும் ஆசையில் சென்னைக்கு வந்தார். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இணைந்தார். 1999இல் தொடங்கி 2000 வரை வெளியான கதை நேரம் வரிசையில் வெளியான 56 குறும்படங்கள், ஜூலி கணபதி திரைப்படம் போன்றவற்றில் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தார்.[2] வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் கொடிவீரன் படத்திலும் நடித்தார். மதுரையைக் களமாக கொண்ட ஆடுகளம் படத்திற்கு உரையாடல் எழுதினார். மதயானைக் கூட்டம் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது படமாக இராவண கோட்டம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படம் மே 12-ல் வெளியாகி உலகமெங்கும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
பிள்ளைகளை பெற்றவர்கள் தான் அவர்களுக்கு பெயர் சூட முடியும் மற்றவர்கள் அல்ல என்ற பழமொழி இவருக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.
தன் மனதில் தோன்றிய கதைகளுக்கு இவர் எண்ணத்தில் வரும் பெயர்களை பாருங்கள் முதல் படமான ‘மதயானை கூட்டம்” இந்த டைட்டில் அனைவரையும் கவர்ந்தது.
அதுபோலவே தன் இரண்டாவது படைப்பிற்கும் “இராவணகோட்டம்’ பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் பெயர்கள்.
வெறும் பெயர்களில் மட்டுமே இவர் பெயர் எடுக்கவில்லை. ஏனென்றால் பயின்ற இடம் பாலு மகேந்திரா என்ற பாட சாலை.
அப்படி ஒரு பாட சாலையில் இருந்து வந்த இந்த விக்ரம் சுகுமார் தமிழ் சினிமாவில் சோடை போவாரா,நிச்சயம் கிடையாது என்பதை தன் இரண்டு பிரம்மாண்ட படைப்புகள் மூலம் நிரூபித்திருக்கிறார்.
இவர் இயக்கும் படைப்புகள் தான் ஒரு சில வருட இடைவெளிகள் விட்டு வருமே தவிர இவரது கதைகளை திரைப்படமாக பார்க்கும் பொழுது நிச்சயமாக பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த இடைவெளி மறந்து போவது நிஜம் .
நம் தமிழ் மண் வாசம் மாறாத படம் இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் விக்ரம் சுகுமார் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நிறந்தர இடம் பிடிப்பார் என்பது நிச்சயம்.
நீண்ட நாட்கள் நடித்தும் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று ரசிகர்களால் பேசப்பட்ட பல நடிகர்களை தன் படங்களில் நல்ல கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைப்பதில் கைதேர்ந்தவர் இந்த விக்ரம் சுகுமார். உதாரணம் நடிகர் சாந்தனு அவர் நடித்த படங்களிலேயே இந்த “இராவணக்கோட்டம்” படம் ஒரு கேடயம், அதற்குக் காரணம் இயக்குனர் விக்ரம் சுகுமார்.
ஒரு திரைப்படம் என்றால் அதில் கதைக்களமாக நாம் சொல்ல வந்த விஷயத்தை படத்தின் முதலில் ஆரம்பித்து இறுதிவரை சொல்லியே ஆக வேண்டும் என்று கவனமாக இருப்பார்.
எப்பேர்ப்பட்ட பைக் ரேஸ் வீரராக ஆக இருந்தாலும்,குத்து சண்டை வீரராக இருந்தாலும், கபடி வீரராக இருந்தாலும், ஏதாவது ஒரு முறை அடி சறுக்குவது நிச்சயம். அதுபோல சின்ன சின்ன சறுக்கல்களை சந்தித்த இயக்குனர் விக்ரம் சுகுமார் தளராத மனமும், திடமான உறுதியும் கொண்டு தான் தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று இன்றுவரை மட்டுமல்ல இன்னும் பல வருடங்கள் நல்ல கதைகளை கொடுத்து நிச்சயமாக முன்னணி இயக்குனர்கள் வரிசையில் வந்து அமர்வார் இந்த விக்ரம் சுகுமார்.