full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :
Latest Update

மலையாளத்தில் கடந்த மே 5-ம் தேதி வெளியான 2018 Everyone Is A Hero படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

‘2018 Everyone Is A Hero’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அதிக வசூல் பெற்று பிளாக்பஸ்டர் சாதனை பெற்றுள்ளது. அனைத்து இடங்களில் இருந்தும் இந்த படத்திற்கு வரும் அபரிவிதமான பாராட்டுக்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இப்படம் கேரளாவில் மட்டும் 9வது நாளில் சுமார் 5.18 கோடி வசூல் செய்து மாலிவுட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் முதல் 9 நாட்களில் 80 கோடி வசூல் செய்து 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் வெளியான நாளிலிருந்தே இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுவது மாலிவுட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும், மேலும் பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து மலையாளத் திரையுலகிற்கு ஒரு புதிய முகத்தை அளித்து வருகிறது. இந்த படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது, இது தான் உண்மையான தி கேரளா ஸ்டோரி என ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் மே 5ஆம் தேதி வெளியான மாலிவுட்டின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் 2018 Everyone Is A Hero. இதில் டோவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சாகோ போபன், லால், நரேன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, தன்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இயக்குனர் ஜூட் கேரளா வெள்ளத்தை இந்த படத்திற்குள் உருவாக்கி பார்வையாளர்களுக்கு அந்த அற்புதமான தருணங்களை மீண்டும் வழங்கி வெற்றி பெற்றுள்ளார். கதை தத்ரூபமாக இருக்க கலை இயக்குனர் பெரிதும் உதவியுள்ளார், அவருக்கு தனியாக விருதே கொடுக்கலாம்.
 
காவ்யா பிலிம் கம்பெனி மற்றும் பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வேணு குன்னப்பிள்ளி, சி கே பத்மகுமார் மற்றும் ஆண்டோ ஜோசப் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மாளிகைப்புறத்திற்குப் பிறகு காவ்யா பிலிம் கம்பெனியின் 2வது பேக் டு பேக் பிளாக்பஸ்டர் படம் இது ஆகும். மற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் கலை இயக்குனர்: மோகன்தாஸ், DOP: அகில் ஜார்ஜ், எடிட்டர்: சமன் சாக்கோ, லைன் தயாரிப்பாளர்: ஹோபகுமார் ஜி.கே, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ஸ்ரீகுமார் சென்னிதலா, தலைமை இணை இயக்குனர்: சைலக்ஸ் ஆபிரகாம், PRO & சந்தைப்படுத்தல்: வைசாக் சி வடக்கேவீடு: டிஜிட்டல் தனய் சூர்யா