விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிப்பில் உருவான ‘குஷி’ படத்தின் ஐந்தாவது பாடல் வெளியீடு
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என் பொன்னம்மா..’ எனத் தொடங்கும் ஐந்தாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சிவ நிர்வானாவின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்திருக்கும் ‘குஷி: எனும் பான் இந்திய காதல் நாடக திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதிமன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் மற்றும் மனதை வருடும் பாடல்களால் இப்படம் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் உள்ளது. அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் பிரத்யேக இசை நிகழ்ச்சி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது இத்திரைப்படம் இன்னும் சில தினங்களில் அனைத்து குடும்பங்களையும் மகிழ்விக்க தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தில் இடம்பெற்ற ‘என் பொன்னம்மா..’ எனத் தொடங்கும் ஐந்தாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பாடல் அனைத்து கணவன்மார்களுக்கும் ஏற்றது. தொடர்ச்சியான சார்ட்பஸ்டர் மெலோடிகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஒரு துள்ளலிசையுடன் கூடிய பாடலாக இதை உருவாக்கி இருக்கிறார். இது அனைவரையும் மயக்கும்.
இந்தப் பாடல் ஆராத்யாவுடன் திருமணத்திற்குப் பிறகு விப்லவ்வின் போராட்டத்தை விளக்குகிறது. விப்லவ் அனைவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துகிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடலுக்கு விஜய் பிரகாஷ் பின்னணி பாடி இருக்கிறார். இந்தப் பாடலுக்கு விஜய் தேவரகொண்டாவின் எளிமையான நடன அசைவுகள் பார்வையாளர்களை வசீகரிக்கிறது .
இந்தப் பாடல் அனைத்து மொழிகளிலும் உடனடியாக பிரபலமாகும். ‘குஷி’ மிகவும் எதிர்பார்க்கப்படும் காதலை மையப்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தினை பெரிய திரைகளில் கண்டு ரசிக்க பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியுடன் ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்திருக்கிறார்.
குஷி படத்தில் இடம் பெற்ற ஐந்தாவது பாடல் ‘என் பொன்னம்மா..’ எனத் தமிழிலும், ‘ ஒஸி பெல்லம்மா..’ எனத் தெலுங்கிலும், ‘ மேரி ஜானே மன்..’ என இந்தியிலும், ‘ ஹே ஹெண்டாட்டி..’ என கன்னடத்திலும், ‘ ஒரு பெண்ணித்தா..’ என மலையாளத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது. https://www.youtube.com/watch?v=ycb0zazNwnc&list=PLD8J0-dKvBid_LxIiP_7MsYWyVB4iTYgl&index=3