புதுமுகங்கள் அறிமுகம் ஆகும் ரங்கோலி படம் வண்ணமயமான ஓவியமா இல்லை கண்ணை கூசும் வெப்பமா என்று பார்க்கலாம்
அறிமுக நாயன் அம்ரேஷ் அமிமுக நாயகி பிராத்தனா சந்தீப் மற்றும் நாயனின் தந்தையாக ஆடுகளம் முருகதாஸ் அம்மாவாக சாய் ஸ்ரீ தங்கையாக அக்சயா அமித் பார்கவ் மற்றும் பலர் நடிப்பில் சுந்தரமூர்த்தி இசையில் மருதநாயகத்தின் ஒளிப்பதிவில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் ரங்கோலி
சரி படத்தின் கதையை பார்ப்போம்; மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து சலவை தொழில் செய்து வரும் ஆடுகளம் முருகதாஸ், தன் மகனை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். அவர் தான் நாயகன் ஹமரேஷ். மாநகராட்சி பள்ளியில் படிக்கும் ஹமரேஷை, பெரிய பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று தந்தை நினைக்கிறார். ஆனால், ஹமரேஷுக்கு அதில் விருப்பம் இல்லை, இருந்தாலும் தந்தைக்காக அவர் சேர்க்கும் தனியார் பள்ளியில் சேர்ந்து படிப்பவர், அங்குள்ள சக மாணவர்களால் லோக்கல் என்று சொல்லி சீண்டப்படுகிறார். இருந்தாலும் தனக்கு பிடித்த பெண் பிரார்த்தனா அந்த பள்ளியில் படிப்பதால் அனைத்தையும் சகித்துக்கொண்டு அங்கேயே படிப்பை தொடர்கிறார்.
இதற்கிடையே, தமிழ் பாடத்தை தவிர மற்ற பாடங்களில் சரியாக படிக்க முடியாமல் திணறும் ஹமரேஷை, அப்பள்ளியில் இருந்து நீக்கும் முயற்சியில் தலைமை ஆசிரியர் ஈடுபடுகிறார். ஆனால், தமிழ் ஆசிரியரின் ஆதரவால் அது நடக்காமல் இருக்க, ஹமரேஷும் படிப்பில் முன்னேற்றம் அடைகிறார். இந்த சமயத்தில், சக மாணவர்கள் செய்த செயலால் ஹமரேஷுக்கு பெரிய பிரச்சனை ஏற்பட, அதன் பிறகு அவர் பள்ளி வாழ்வு என்னவானது? என்பது தான் மீதிக்கதை.
நாயகனாக நடித்து இருக்கும் அம்ரேஷ் தன் முதல் படத்திலே துடிப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை தருகிறார் கொடுத்த கதாபாத்திரத்தை நியாபடுத்தியுள்ளார்.
நாயகி பிரத்தனா நாயகிக்கு ஆனா ஒரு தோற்றம் இல்லாமல் ஊரு சிறு பெண் போல காண்கிறார். கொஞ்சம் கூட குழந்தை பருவம் மாறாத பெண் போல இருப்பது கொஞ்சம் எடுபடவில்லை இவரின் தோற்றத்துக்கு காதல் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் ஓவர்.
நாயகனின் தந்தையாக நடித்து இருக்கும் ஆடுகளம் முருகதாஸ் ஏற்கனவே பல படங்களில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து உள்ளார் அதை மீண்டும் இந்த படத்திலும் நிரூபித்துஉள்ளர். அம்மாவாக வரும் சாய் ஸ்ரீ அவரும் தன் பங்குக்கு மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சுந்தரமூர்த்தி இசை படத்திற்கு பலம் பாடல்களும் சரி பின்னணி இசையிலும் நம்மை ரசிக்க வைக்கிறார் கதையோடு பயணிக்கவும் வைக்கிறார். மருதநாயகத்தின் ஒளிப்பதிவு இயக்குனருக்கு பலம.
பள்ளி மாணவர்களை மையப்படுத்திய கதை என்றால் என்னலாம் இருக்குமோ அவை அனைத்தும் இந்த படத்திலும் இருக்கிறது. அதே சமயம், கல்வி அரசியல் பற்றி பேசியிருக்கும் இயக்குநர் வாலி மோகன் தாஸ், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் இவற்றில் மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுப்பது எது? என்ற விவாதத்தையும் நடத்தியிருக்கிறார்.
கல்வி குறித்து இயக்குநர் சொல்லும் விசயங்கள் அந்த அலுப்பை போக்கி சற்று சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது. அதேபோல், பள்ளி மாணவர்கள் இடையே காதல் என்று சொல்லாமல் கதையை வேறு திசையில் நகர்த்தியிருப்பதும் ரசிக்க வைத்திருக்கிறது.
ரங்கோலி மொத்தத்தில் வண்ணமயம் வர்ணஜாலம்
ரங்கோலி – திரைவிமர்சனம் (Rank 3/5)