full screen background image
Search
Monday 25 November 2024
  • :
  • :
Latest Update

பான் இந்திய பிரமாண்டமாக உருவாகும் டைகர் நாகேஸ்வர ராவ்

மாஸ் மகாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்தியன் திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அற்புதமான 2வது சிங்கிள் “வீடு” பாடல் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது

பான் இந்திய பிரமாண்டமாக உருவாகும் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் இசை பயணத்தை முதல் சிங்கிள் பாடலுடன் உற்சாகமாகத் தொடங்கினார்கள், அது சூப்பர் ஹிட்டாக மாறியது. டைகர் நாகேஸ்வர ராவின் காதல் கோணத்தை இந்தப் பாடல் காட்டியது. இப்போது, ​​​​டைகர் நாகேஸ்வர ராவின் மற்றொரு பக்கத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது. செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இரண்டாவது பாடலான வீடு, டைகர் நாகேஸ்வர ராவின் அவதாரத்தைக் காட்டும்.

தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் ரவி தேஜா, டைகர் நாகேஸ்வர ராவ் பாத்திரத்தில் கண்களில் பொறி பறக்க உக்கிரமாக நடப்பதைக் காணலாம். அவர் பீடி புகைக்கும்போது, ​​அவருக்குப் பின்னால் இருப்பவர்கள் பைத்தியம் பிடித்து, காட்டு நடனம் ஆடுகிறார்கள். இந்த போஸ்டர் டைகர் நாகேஸ்வர ராவ் மீதான ஆவலை தூண்டுகிறது. மேலும் செப்டம்பர் 21 அன்று நாம் எந்த மாதிரியான ஆல்பத்தை கேட்கவிருக்கிறோம் என்று இதன் மூலம் யூகிக்கலாம்.

தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து பான் இந்தியா பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் இப்படத்தைப் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார்.இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை R மதி ISC செய்கிறார், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

அக்டோபர் 20-ம் தேதி தசரா பண்டிகை வெளியீடாக ரிலீஸாகிறது.

நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ரேனு தேசாய், அனுபம் கெர் மற்றும் பலர்.

எழுத்து – இயக்கம் : வம்சி
தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால் இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா வசனம்: ஸ்ரீகாந்த் விசா
இசையமைப்பாளர்: GV பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : R மதி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங்க் – ஃபர்ஸ்ட் ஷோ