full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

இந்த கிரைம் தப்பில்லை திரைவிமர்சனம்

இந்த கிரைம் தப்பில்லை திரைவிமர்சனம் 

நடிகர்கள்: ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால்

இசை: பரிமளவாசன்

ஒளிப்பதிவு: கார்த்திகேயன்

இயக்கம்: தேவகுமார்

கதைப்பார்போம் 

ஒரு செல் போன் கடையில் வேலை பார்க்கிறார் மேக்னா. அப்போது, அங்கு வரும் மூன்று இளைஞர்களை வேறு வேறு பெயரில் தன் பின்னால் சுற்ற வைக்கிறார் மேக்னா.

அதே சமயத்தில், ரிட்டையர்ட் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன், சைலண்டாக ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் செய்து வருகிறார். இந்த ஆப்ரேஷனை பாண்டி கமலை வைத்து நடத்த திட்டம் தீட்டுகிறார் ஆடுகளம் நரேன்.

மேக்னா எதற்காக அந்த இளைஞர்களை தன் பின்னால் சுற்ற வைக்க வேண்டும்.?? ஆடுகளம் நரேன் ஏன் செய்கிறார்.?? இதுதான் படத்தின் கதை.

பெண்களை அவர்களது உரிமை இல்லாமல் பாலியல் துன்புறுத்தல் செய்து அவர்களை கொலை செய்யும் காமவெறி பிடித்த மிருகங்களுக்கு தண்டனை நாம் கொடுத்தாலும் தப்பில்லை என்ற லைனில் கதை எழுதப்பட்டிருக்கிறது.

மேக்னாவின் சண்டைக் காட்சிகள் ஏற்கும் படி இல்லை.

படத்தில் ஒரு தெளிவான போக்கு இல்லை. 

படம் ஓடிக் கொண்டிருக்கும் போது, எந்த வித சம்மந்தமும் இல்லாமல் சாதிய பாடலும் ஒன்று எட்டிப் பார்த்துச் செல்கிறது. எதற்காக யாருக்காக இந்த படங்களை இயக்குகிறார்கள் என்ற காரணம் தெரியவில்லை.

ஆடுகளம் நரேனின் நடிப்ப இயல்பாக  தெரிந்தது. பாண்டி கமல் எப்போதும் வெறி பிடித்தவராகவே சுற்றித் திரிகிறார். பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் அப்பாவையே அழைத்து வந்து கையில் பணம் கொடுத்து வழக்கை வாபஸ் பெற கூறுவதெல்லாம் என்ன மாதிரியான மன நிலையில் இந்த மாதிரியான காட்சிகளை அமைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

திடீர் திடீரென்று பின்னணி இசை, டப்பிங் வேறு வேறு திசைக்குச் சென்றது நம்மை பெரிதும் டிஸ்டர்ப் ஆக்கிவிடுகிறது. ஒளிப்பதிவு சற்று ஆறுதல்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் சொல்லப்பட வேண்டிய கதை தான் இயக்குனருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

இந்த கிரைம் தப்பில்லை