அவள் பெயர் ரஜ்னி – விமர்சனம்
Vinil Scariah Varghese இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமிதா ப்ரமோத், சைஜு க்ரூப், அஷ்வின் குமார், ரெபா ஜான் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் “அவள் பெயர் ரஜ்னி”.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள் 4 Musics. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர் ஆர் விஷ்ணு.
கணவன் மனைவியான சைஜு க்ரூப் மற்றும் நமிதா ப்ரமோத் இருவரும் காரில் செல்லும் போது, ஒரு பெண் உருவம் சைஜு க்ரூப்பை கொடூரமாக கொன்று விடுகிறது.
நமிதா ப்ரமோத்தின் சகோதரனாக வரும் காளிதாஸ் ஜெயராம், யார் இந்த கொலையை செய்தது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
தொடர்ந்து நமிதா ப்ரமோத்தையும் கொலை செய்ய அந்த பெண் உருவம் முயற்சி செய்கிறது.
எதற்காக அந்த பெண் உருவம், சைஜு க்ரூப்பை கொலை செய்தது.? நமிதா ப்ரமோத்தை காளிதாஸ் ஜெயராம் காப்பாற்றினாரா இல்லையா.? கொலைக்கான காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக வந்து நிற்கிறார் காளிதாஸ் ஜெயராம். ஆங்காங்கே எட்டிப் பார்த்த ஹீரோயிசத்தை சற்று குறைத்திருக்கலாம்.
நாயகிகள் இருவரும் தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை அளவோடு கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
ப்ளாஷ் பேக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரும் பலம். திருநங்கைகளின் வாழ்வியலை கொண்டு வந்து அவர்களின் வலியை வலுவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
திருநங்கையாக நடித்திருந்தவர் காட்சிக்கு காட்சி பலம் சேர்த்துக் கொண்டே சென்றார். ஆக்ஷனிலும் அதிரடி காட்டியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் அஸ்வின் குமாரும் ஏற்ற பொருத்தமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார்.
சமூகத்தின் மனநிலையையும் தோலுரித்திருக்கிறார் இயக்குனர். மெதுவாக நகர்ந்து செல்லும் கதையானது இரண்டாம் பாதியில் வேகமெடுத்து செல்கிறது.
திரைக்கதையின் வேகம் நம்மையும் கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், படத்தின் பின்னணி இசை பெரும் பலமாக வந்து நிற்கிறது. கொலை செய்தது யார் என்ற தேடுதல் காட்சிகள் பரபரப்பை கொண்டு வருகிறது.
ஒளியை அளவாக கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது ஒளிப்பதிவு.
காட்சிகளின் விறுவிறுப்பால் கதை வேகமாக நகர்வது படத்திற்கு பலம்.
ரஜினி போஸ்டர் காட்சிகள் அதற்கான BG ஸ்கோர் இரண்டும் புல்லரிக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில் அவள் பெயர் ரஜ்னி – அழகானவள் அன்பானவள் ரசிக்கவைப்பவள்
அவள் பெயர் ரஜ்னி – விமர்சனம