கான்ஜுரிங் கண்ணப்பன்” – திரைவிமர்சனம்
கதையின் நாயகனாக சதீஷ் நடித்து இருக்கும் படம் “கான்ஜுரிங் கண்ணப்பன்” முழுக்க முழுக்க நகைசுவை படமாக உருவாக்கி இருக்கும் படம் இந்த படம் நம்மை சிரிக்க வைத்ததா இல்லை அழவைத்தாத என்று பார்க்கலாம் .
செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ஆனந்தராஜ், ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், நாசர், ரெடின் கிங்க்ஸ்லி, நமோ நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் இந்த “கான்ஜுரிங் கண்ணப்பன்”. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கணவன் மனைவியான விடிவி கணேஷ் மற்றும் சரண்யா பொன்வண்ணனிற்கு மகனாக வருகிறார் சதீஷ். சதீஷின் மாமாவாக வருகிறார் நமோ நாராயணன்.
ஒருநாள் வீட்டின் பின்னால் இருக்கும் கிணற்றில் இருந்து, சிறிய பொம்மை இருக்கும் ஒரு பொருளை எடுக்கிறார் சதீஷ். அதில் இருக்கும் ஒரு இறகை பிய்த்து விடுகிறார்.
அந்நாளில் இருந்து அவர் தூங்கினால், கனவிற்குள் வேறு ஒரு உலகத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அரண்மனை போன்ற வீட்டிற்குள் அமானுஷ்யம் சதீஷை கொல்ல வருகிறது.
கனவில் நடக்கும் விஷயமாக இல்லாமல், அது நிஜத்திலும் எதிரொலிக்கிறது. தொடர்ந்து அந்த கனவு உலகத்திற்குள் சரண்யா பொன்வண்ணன், நமோ நாராயணன், விடிவி கணேஷ், கிங்க்ஸ்லி, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் மாட்டிக் கொள்கிறார்கள்.
அந்த வீட்டிற்குள் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
கதையின் ஓட்டம் மிக மிக மெதுவாக சென்று, நம்மை பொறுமையின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. படத்தின் முதல் பாதியில் காமெடி என்ற பெயரில் நம்மை சற்று தலைவலி வரும் நிலைக்கே கொண்டு சென்றுவிட்டார்கள்.
பெரிய தலைவலி வராமல் பார்த்துக் கொண்டவர்கள் கிங்க்ஸ்லியும் ஆனந்தராஜும் தான். இவர்கள் இருவரின் காமெடி மட்டுமே ஆங்காங்கே நம்மை சிரிக்க வைத்துள்ளது.
இரண்டாம் பாதி சற்று ஆறுதல், இருந்தாலும் நீளத்தை குறைத்திருக்கலாம். படத்தின் பின்னணி இசை மிரட்டல்.
ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
சதீஷ் நடிப்பில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தலாம். சரண்யா பொன்வண்ணனி ஓவர் ஆக்டிங் பெர்பார்மன்ஸை குறைத்திருக்கலாம். விடிவி கணேஷ் கொடுத்ததை அழகாக செய்து முடித்திருக்கிறார்.
மொத்தத்தில் “கான்ஜுரிங் கண்ணப்பன்” நம்மை அழவைத்து
“கான்ஜுரிங் கண்ணப்பன்” – திரைவிமர்சனம் Rank 2.5/5