full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

மிகவும் சுவார்யஷ்யமான கதை பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் கண்ணகி

நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் ஒரு பெண்ணீயத்தை பற்றி கதை முற்றிலும் முழுமையாக வித்தியாசமான கதை களம் கொண்ட படம் தான் இந்த கண்ணகி தலைப்புக்கு ஏற்ப கதையும் மிகவும் சுவார்யஷ்யமான கதை பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் கண்ணகி

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, மயில்சாமி, வெற்றி, யஷ்வந்த் கிஷோர் நடித்து இயக்ககி இருக்கும் படம் தான் இந்த “கண்ணகி”.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஷான் ரகுமான். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராம்ஜி.

படத்தில் நான்கு பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி கதை பின்னப்பட்டுள்ளது.

அம்மு அபிராமி:

பல மாப்பிள்ளைகள் பார்த்தும் ஏதேதோ காரணத்திற்காக திருமணம் தொடர்ந்து தடை பட்டுக்கொண்டே வருகிறது அம்மு அபிராமிக்கு. அம்மு அபிராமியின் தாயான மெளனிகா, தந்தையான மயில்சாமி இருவரும் அம்மு அபிராமியின் எதிர்காலத்தை நினைத்து தொடர்ந்து கவலைப்படுகின்றனர்.

வித்யா பிரதீப்:

விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார் வித்யா பிரதீப்பின் கணவர். வித்யா பிரதீப்பிற்கு ஆதரவாக வாதாடுகிறார் வெற்றி. விவாகரத்தை வேண்டா வெறுப்பாக கொடுத்து விடுகிறார் வித்யா பிரதீப். வித்யா பிரதீப்பிற்கும் வெற்றிக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது.

ஷாலின் சோயா:

தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஷாலின். தண்ணி, தம் என்று மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அந்த வாழ்க்கை வாழ்ந்து வரும் ஷாலின், ஒருவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். சில நாட்கள் கழித்து அவர் ஷாலினிடம் திருமணம் செய்து கொள்ள ப்ரப்போஸ் செய்கிறார்.

கீர்த்தி பாண்டியன்:

யஷ்வந்த் கிஷோர் வீட்டில் இருக்கும் கீர்த்தி பாண்டியன் நான்கு மாத சிசுவை சுமந்து நிற்கிறார். சிசுவை கலைக்க இருவரும் மருத்துவமனை மருத்துவமனையாக ஏறுகின்றனர். ஆனால், சிசு 4 மாதங்கள் ஆகிவிட்டதால் அதனை கலைக்க மருத்துவர்கள் மறுக்கின்றனர்.

இந்த நால்வரின் கதை தான் இந்த “கண்ணகி” படத்தின் கதை. இந்த வாழ்க்கை எங்கு சென்று முடிந்தது.? அது நல்ல முடிவா அல்லது காலத்தால் திசை மாறிய முடிவா என்பதே படத்தின் கதை.

நான்கு கதாபாத்திரங்களை மிகவும் யதார்த்தமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் யஷ்வந்த் கிஷோர். பல படங்களில் நடித்த அனுபவத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் நாயகி அம்மு அபிராமி. தனது தந்தை இழப்பை தாங்க முடியாமல் அழும் காட்சியில் நம்மையும் அழ வைக்கும் அளவிற்கு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அம்மு அபிராமி.

வாழ்க்கை யாருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வேண்டா வெறுப்பாக இருக்கும் நிலையில், ஒரு கை, துணையாக வரும்போது அதுவும் நம்மை விட்டுச் சென்றால்… அந்த மனநிலையை நன்றாகவே உணர்ந்து உள்வாங்கி நடித்திருக்கிறார் நாயகி வித்யா பிரதீப்.

ஒரு திமிரான, தெனவட்டான எவருக்கும் அடங்காத பெண்ணாக நடித்து கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஷாலின்.நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் மிக நேர்த்தியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று உள்ளார்.

பல விதமான சோகங்களை மனதிற்குள் தாங்கிக் கொண்டும் 4 மாத சிசுவை வயிற்றில் ஏந்திக் கொண்டும் ஒரு இறுக்கமான மனநிலையில் நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன் அக்கதாபாத்திரமாகவே கண்களை விட்டு அகலாமல் நடித்துச் சென்றிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த நான்கு பெண்களும் படத்திற்கு மிக பெரிய பலமாகவும் இயக்குனருக்கு எண்ணத்தையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஷான் ரகுமானின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலமாக வந்து நிற்கிறது. பாடல்கள் கதையோடு பயணம் பெறுகிறது.

ராம்ஜியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகவே இருக்கிறது. அதிலும், கீர்த்தி பாண்டியனுக்கு மேல் வைக்கப்பட்ட வெளிச்சம் பளிச்..

அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துமா.? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

க்ளைமாக்ஸ் காட்சிகள் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் காட்சிகள் தான். இந்த 4 கதைகளின் முடிவை எப்படி முடிப்பார் இயக்குனர் என்று நிற்கும் நேரத்தில் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கான ஒரு க்ளைமாக்ஸை வைத்திருக்கிறார் இயக்குனர்.

படத்திற்கு மேலும் பலம் என்றால் அது படத்தின் வசனங்கள் என்று தான் சொல்லணும்.

இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் கண்ணகி படம் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்று முத்திரை பதித்து விட்டார். மிக சிறந்த திரைக்கதை மூலம் இந்த படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

கண்ணகி – இன்றைய சமுதாயத்தின் கண்கள்

கண்ணகி – திரைவிமர்சனம்