full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :
Latest Update

2023 ஆம் ஆண்டில் ஷாருக் கான் பாக்ஸ் ஆபிஸில் ஹாட்ரிக் சாதனை

ஷாருக்கான் உண்மையிலேயே உலகளாவிய அடையாளம் : 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய பாக்ஸ் ஆபீசில் 117 மில்லியன் டாலர்களை வசூலித்து ஷாருக்கானின் படங்கள் சாதனை படைத்திருக்கிறது.

2023 ஆம் ஆண்டில் ஷாருக் கான் பாக்ஸ் ஆபிஸில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார்.‌ ‘பதான்’- 1050. 30 கோடி ரூபாய் வசூலித்தது. ‘ஜவான்’- 1148.32 கோடி வசூலித்தது. ஆண்டு இறுதியில் வெளியான ‘டங்கி’ உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது. ஒரே வருடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை ஷாருக் கான் தொடர்ந்து வழங்கி இருக்கிறார். அவரின் நடிப்பில் வெளியான இந்த மூன்று படங்களும் இணைந்து 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 117 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது. இது சீனாவை தவிர்த்து பாரம்பரிய சர்வதேச சந்தைகளில் ஒரே ஆண்டில் எந்த இந்திய சூப்பர் ஸ்டாரும் அடையாத மிகப் பெரும் சாதனையாகும்.

2023 ஆம் ஆண்டில் இந்திய திரையுலகில் ஷாருக்கான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார் அவர் நடிப்பில் வெளியான ‘பதான்’, ‘ஜவான்’ மற்றும் ‘டங்கி’ ஆகிய திரைப்படங்கள் வசூலில் வெற்றி பெற்று, உலக சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். அவரது வெற்றி.. எப்பொழுதும் பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்ல.. உலகளவிலான திரைத்துறைக்கு புதிய வரையறைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால்… ஷாருக் கான் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்களும்.. தற்போது ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சாதனையை புரிந்த நட்சத்திர நடிகரான ஷாருக்கானை அவரது ரசிகர்கள்.. மிகப்பெரிய அளவில் காட்சிப்படுத்தி, தங்களது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஷாருக்கான் இந்த ஆண்டில் ‘பதான்’ மூலம் உளவாளிகளின் உலகத்தை பிரம்மாண்டமாக ரசிகர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து ‘ஜவான்’ படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகளை வழங்கி ரசிகர்களை பரவசப்படுத்தினார். பின்னர் அவரது நடிப்பில் ‘டங்கி’ வெளியானது. இது ஒரு மகத்தான இதயத்தை வருடும் கதையை திரையில் காட்சிப்படுத்தியது. ஆக்ஷன் இல்லாத படைப்பாக இருந்தாலும்… ‘டங்கி’ திரைப்படமும் குறிப்பிடத்தக்க அளவில் புகழை பெற்றதுடன், பாக்ஸ் ஆபீசிலும் வெற்றியை பெற்றது. ராஜ்குமார் ஹிரானியின் உணர்வு பூர்வமிக்க சினிமாவிற்கு இந்த திரைப்படம் பொருத்தமான சான்றாகவும் அமைந்தது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கமான லு கிராண்ட் ரெக்ஸில் ‘டங்கி’ திரையிடப்பட்டது. இத்திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்தி திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது. இதனுடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவர் மற்றும் ஆர்க் டி ட்ரையம்ப் போன்ற நினைவுச் சின்னங்களுக்கு முன்பாக இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‘லீ புட் கயா’ மற்றும் ‘அன்பான..’ பாடல் காட்சி திரையிடப்பட்டது. உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் இதயங்களை ‘டங்கி’ மூலம் ஷாருக்கான் கவர்ந்துள்ளார்.