அயலான் – திரை விமர்சனம்
சிவகார்த்திகேயன் ரகுல் ப்ரீத் சிங் யோகி பாபு பால சரவணன் பானுப்ரியா கருணாகரன் நீண்ட இடைவெளிக்கு பின் இஷா கோபிகர் மற்றும் பலர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் ரவிக்குமார் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் அயலான்
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் இந்த அயலான் ரசிகர்களை கவர்மா கவராதா என்று பார்ப்போம்
இந்தத் திரைப்படத்தில் விமர்சனத்தை முதல் முதல் வரி மிக சிறந்த பொழுதுபோக்கு படம் என்று சொல்லலாம் குறிப்பாக குடும்பத்தோடு இந்த பொங்கல் விடுமுறையை இந்த திரைப்படத்தோடு கொண்டாடலாம். நான்கு வருட போராட்டம் இந்த போராட்டம் மிக வலிமையான போராட்டமாக தான் அமைந்திருக்கிறது சர்வதேச அளவிற்கு தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமா சோடை போகவில்லை என்று நிரூபித்திருக்கும் படம் இந்தப் படம் கிராபிக்ஸ் என்ற வி எப் எக்ஸ் காட்சிகளில் நம்மை மிரட்டி இருக்கிறார்கள் வேப்படை செய்து இருக்கிறார்கள் என்று சொன்னால் மிக ஆகாது இந்த திரைப்படத்தை குழந்தைகள் அனைவரும் ஏன் குடும்பத்தோடு ஒவ்வொருவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு படமாகத்தான் அமைந்திருக்கிறது இயக்குனர் ரவிக்குமார் இந்திய சினிமாவின் சொத்து என்றும் சொல்லலாம் ஏன் இயக்குனர் சங்கரை மிஞ்சக் கூடிய அளவிற்கு ஒரு திறமை கொண்டவர் என்றும் சொல்லலாம். இதுவரை எத்தனையோ திரைப்படங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச படங்களை பார்த்து காப்பி அடித்து இருக்கிறார்கள் ஆனால் அந்த காப்பி முழுமை அடைந்ததில்லை ஆனால் இந்த படத்தில் மிக கனகச்சிதமாக அமைத்திருக்கிறார்கள் இந்த ஏலியன் வடிவத்தை அதோடு அந்த ஏலியனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இயக்குனர் ரவிக்குமார் மிகச் சிறப்பாக கையாண்டு உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் இந்த திரைப்படம் தாமதத்திற்கு முக்கிய காரணம் இந்த கிராபிக்ஸ் காட்சிகள் தான் இந்த நான்கு வருட தாமத காலத்திற்கான ஒழிப்பு திரையில் அற்புதமாக தெரிகிறது அதோடு படத்தின் கதையும் திரைக்கதையும் சர்வதேச படங்களோடு போட்டி போடும் அளவிற்கு அமைத்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ரகுல் பிரீத் சிங் இன்னும் மற்ற பல நட்சத்திரங்கள் இருந்தாலும் நம் கண்ணுக்கு தெரிவது இயக்குனர் ரவிக்குமார் தான் முதலில் இப்படிப்பட்ட ஒரு திறமை வாய்ந்த இயக்குனருக்காக இந்த படத்தை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
சரி படத்தின் கதையைப் பார்ப்போம் பூம்பாறை என்ற கிராமத்தில் தன் அம்மாவுடன் இயற்கை விவசாயம் செய்யும் சிவகார்த்திகேயன் இயற்கை விவசாயம் செய்யும் வாலிபர் என்றாலே வருமானத்திற்கு கஷ்டப்படுவார்கள் அந்த வகையில் அவர் தாயின் சொல்லுக்கு இணங்க சென்னை வருகிறார். பூமிக்கு மிக ஆழத்தில் உள்ள புதிய வகை வாயுவை எடுக்க ஒரு கூட்டத்தினர் முயற்சி செய்கிறார்கள் அப்படி இந்த வாய்வு எடுத்தால் உலகமே அழிந்து விடும் என்ற நிலை ஏற்படும் இதை தடுக்க ஏலியன் வருகிறது அந்த ஏலியனுடன் சிவகார்த்திகேயனுக்கு ஏற்படும் பழக்கம் சிவகார்த்திகேயனும் ஏலியனும் இணைந்து அந்த வாயு உற்பத்தியை தடுத்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை
இந்த கதைக்கு மிக அற்புதமான திரைக்கதை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார் அதை உணர்ந்து தன் ஹீரோயின் எதுவும் இல்லாமல் கதைக்காக மட்டுமே பாடுபட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன் அதற்காக நாம் அவரை வாழ்த்த வேண்டும். கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக புரிந்து செயல்பட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆசிரியை அக வரும் ரகுல் ப்ரீத் சிங் சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இதோ வந்தும் இரண்டு பாடலுக்கு ஆடினோம் என்று இல்லாமல் கதைக்கு தேவையான கதாபாத்திரமாக அமைத்திருக்கிறார் ரவிக்குமார் அதை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது பாராட்ட வேண்டியும் விஷயம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இஷா கோபிகர் நாயகியாக வலம் வந்த இந்த இஷா கோபிகர் இந்த படத்தின் மூலம் வில்லியாக வலம் வருகிறார் இந்த அழகான பதுமையை வில்லி கதாபாத்திரத்திற்கும் மிக அற்புதமாக பொருந்தி இருக்கிறார் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியும் இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நண்பர்களாக வரும் கருணாகரன் யோகி பாபு பால சரவணன் இவர்கள் அனைவரும் அற்புதமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் கதையின் உணர்வை புரிந்து மிகச் சிறந்த நகைச்சுவையை கொடுத்திருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது குறிப்பாக யோகிபாபு நகைச்சுவை காட்சிகள் பல இடங்களில் நம்மை அறியாமலே நம் கைதட்ட வைக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இயக்குனர் எண்ணம் புரிந்து கதையின் தன்மை புரிந்து எந்தெந்த இடங்களில் கிராபிக்ஸ் எப்படி வரவேண்டும் அதற்கு எப்படி காட்சிகள் அமைக்க வேண்டும் என்று இயக்குனர் எண்ணத்தை புரிந்து மிகச் சிறப்பான ஒரு ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
அடுத்த மிகப்பெரிய பலம் என்று சொன்னால் ஏ ஆர் ரகுமான் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி மிக அற்புதமாக கொடுத்திருக்கிறார். இந்தக் கதைக்கு ஏ ஆர் ரகுமான் தான் சரியாக இருக்க வேண்டும் என்று இயக்குனரின் விருப்பம் அந்த விருப்பத்தை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான் ஒரு இயக்குனர் என்று பார்க்காமல் இயக்குனர் சங்கருக்கும் மணிரத்தினத்திற்கும் எப்படி வேலை செய்வாரோ அதுபோல இந்த படத்துக்கு பணிபுரிந்து இருப்பது அவரை பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில் அயலான் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு குதூகலம் என்று தான் சொல்ல வேண்டும்.