க்ளாஸ்மெட் திரைவிமர்சனம்

cinema news movie review

க்ளாஸ்மெட் திரைவிமர்சனம்

நடிகர் அங்கையற்கண்ணன்

நடிகை பிரணா

இசை  பிரித்வி

இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தி

கதையின் நாயகன், தன் மாமனுடன் சேர்ந்து நாள் முழுக்க குடிக்கிறான். இவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை கதை.

கதையின் நாயகனாக அங்கையற்கண்ணன். வகைதொகையில்லாமல் குடிப்பவர்கள் என்னவெல்லாம் ஏடாகூடம் செய்வார்களோ அதையெல்லாம் அப்படியே செய்திருக்கிறார்!

சம்பாதிக்கிற வேலையை பெரியமனதோடு மனைவிக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு, செலவழிக்கிற சிரமமான வேலையை தூக்கிச் சுமப்பவராக இயக்குநர் சரவண சக்தி. மாப்பிள்ளையோடு சேர்ந்து குடிப்பதை முழுநேரப் பணியாக வைத்திருக்கிற அவரது அலம்பல் சலம்பல் ஓரளவு ரசிக்க வைத்தாலும், பாத்ரூம் என நினைத்து பீரோவை யூரினால் குளிப்பாட்டுவதையெல்லாம் சத்தியமாய் காமெடியாக ஏற்க முடியல சாமி. எந்த நேரமும் போதையில் மிதந்து மனைவியின் அந்த’ பசிக்கு தீனிபோட முடியாத, தன் இயலாமை குறித்து சிந்தித்து குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் காட்சி கவனம் ஈர்க்கிறது!

நாயகனுக்கு மனைவியாய் வருகிற பிரணா ஹோம்லி லுக்கில் லட்சணமாக இருக்க, படம் முழுக்க அவர் திரிகிறார்.சரவனசக்திக்கு மனைவியாக வரும்

இந்த இருவர்களின் இரு மனைவிகளும், கணவர் எவ்வளவுதான் குடித்துக் கூத்தடித்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்,  அவர்கள் மீது அன்லிமிட்டடாய் அன்பைக் கொட்டுகிறார்கள். இது ஏற்க்கும் படி இல்லை.கொஞ்சம் அதிகம் தான்.

‘அயலி’ அபி நட்சத்திரா அவ்வப்போது மின்னல்போல் எட்டிப் பார்த்துவிட்டு, கிளைமாக்ஸில் ஷாக்கடிக்கும்படி எக்குத்தப்பான இடத்திலிருந்து என்ட்ரி கொடுப்பது எதிர்பாராதது!

மயில்சாமி தான் நடித்தவற்றில் கடைசியாக டப்பிங் பேசிய படமாம் இது தான். நடிப்பில் எந்த வித்தியாசமும் காட்டாமல் வழக்கம்போல் குடிகாரராக வந்து, தள்ளாடி நடந்து ‘ஹே…ய், ‘ஹோ…ய்’ என குரல் கொடுக்கிறார். ‘நல்லவன் குடிச்சா குழந்தை, கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என அவர் பேசும் வசனம் ஈர்க்கிறது!

துபாயில் சம்பாதித்து திரும்பி, கிராமத்து காடு மேடுகளில் கோட் சூட்டுடன் பந்தாவாக வலம் வருகிற சாம்ஸ், குடிபோதை மறுவாழ்வு மையம் நடத்தி வரும் டி எம் கார்த்திக் குடியை விட சிகச்சைகாக வரும் அவர்களுடன் பழகி, அவர்களைவிட மகா  குடிகாரனாக மாறிப்போகிறார்.

அருள்தாஸ், மீனாள் என இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்களின் பங்களிப்பு நிறைவு!

‘வாடா மச்சி கட தொறந்தாச்சு’, ‘அடிக்கிற பொண்டாட்டி தெருவுல நிப்பாட்டி’ பாடல்களை ரகளையாக தந்திருக்கிறார் பிரித்வி!

ஒளிப்பதிவு நேர்த்தியகா உள்ளது.