full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :

சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா !

Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அரண்மனை 4’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

நடிகை, தயாரிப்பாளர் குஷ்பு பேசியதாவது…
இப்படத்தின் நான்கு பாகங்கள் வரை வெற்றிகரமாகப் போக முக்கிய காரணம் சுந்தர் சி தான். அவருடன் 30 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு படத்திலும் எப்படி வித்தியாசமாக ரசிகர்களை மகிழ்விக்கலாம் என எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பார். வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளும், ஹாரர் திரைப்படங்களுக்கு ஃபேன். எனவே தான் அவரும் இந்த ஜானரில் தொடர்ந்து படமெடுக்கிறார். அரண்மனை படத்தை சோறு கட்டிக்கொண்டு வந்து திரையரங்கில் குடும்பத்தோடு ரசிக்கும் ரசிகர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம். அவர்களுக்கு நன்றி. மேலும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் Benz Media  A.C.S அருண்குமார் சார், இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் ஒன்றாக இருக்க முடியாது என சொல்வார்கள். ஆனால் இந்த படத்தில் தமன்னா, ராஷிக்கண்ணா அவ்வளவு ஒத்துழைப்பு தந்தார்கள். கோவை சரளா மேம் மற்றும் நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்கள் வீட்டுப் பிள்ளை ஹிப்ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சூப்பரான விஷுவல்ஸ் தந்துள்ளார்.  எல்லோருக்கும் என் நன்றிகள். அரண்மனை 3 பாகங்களை விட இப்படம் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.  இறுதியாக எங்கள் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து  உழைத்துக் கொண்டிருக்கும் என் கணவர் சுந்தர் சிக்கு நன்றிகள்.

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…
சுந்தர் சி சார் படத்தில் வேலை பார்ப்பது, நமது அப்பா அண்ணன் உடன் வேலை செய்வது மாதிரி தான். அவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொள்வார். அவருக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லிவிடுவார். வேலை எப்போதும் ஜாலியாக இருக்கும். இப்படத்தில் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்.

நடிகை தமன்னா பேசியதாவது…
சுந்தர் சி, குஷ்பூ மேடம் எனக்கு ஃபேமிலி மாதிரி. பணம், வாய்ப்பு எல்லாம் அப்புறம் தான். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சுந்தர் சி சார் உடன் என்றால் ஓகே என்ன படம் வேண்டுமானாலும் செய்யலாம், அவரை அவ்வளவு நம்புகிறேன். மிகத் திறமையான இயக்குநர். அவர் நினைத்தால் ஹீரோக்களை வைத்து என்ன மாதிரி படங்கள் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் பெண்களை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும் படி கதை செய்துள்ளார், அவருக்கு நன்றி. குஷ்பூ மேடத்தால் முடியாதது எதுவுமே இல்லை. சினிமா, பொலிடிகல் என எல்லாவற்றிலும் அசத்துகிறார். அவர் என் இன்ஸ்பிரேஷன். ராஷி கண்ணாவும் நானும் ஏற்கனவே தெலுங்கு படம் செய்துள்ளோம். மிகச்சிறந்த கோ ஆர்டிஸ்ட், மிக உண்மையானவர். என்னை அதிகம் நேசிப்பவர். அவர் நிறைய பியூட்டிஃபுல் படங்கள் செய்துள்ளார் வாழ்த்துக்கள். கோவை சரளா மேடம் செம்ம ஜாலியானவர். இப்படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இப்படம் வெளியாவதற்காக நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி

வித்தியாசமாகச் செய்துள்ளார் ஆதி. எனக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருக்கும் என் மனைவிக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் ஏப்ரலில் வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.

அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கவலை மறந்து சிரித்துக் கொண்டாடும்  வகையிலான ஹாரர் காமெடியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி.

இப்படத்தில் சுந்தர் சி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே ஜி எஃப் ராம், VTV கணேஷ், சேசு, ஜேபி, டெல்லி கணேஷ், சந்தோஷ் குமார், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு

தயாரிப்பு – Avni Cinemax (P) Ltd & Benz Media PVT LTD
எழுத்து இயக்கம் – சுந்தர் சி
வசனம் – வெங்கடேஷ்
இசை : ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு – இசக்கி கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் – பொன்ராஜ்
சண்டைப்பயிற்சி – ராஜசேகர் K
ஸ்டில்ஸ் – V.ராஜன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)