full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

தீரன் நடிக்கும் ‘சாலா’ டிரைலரை அல்லு அர்ஜுன் வெளியிட்டார்; டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு

தீரன் நடிக்கும் ‘சாலா’ டிரைலரை அல்லு அர்ஜுன் வெளியிட்டார்; டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு

பீப்பிள் மீடியா ஃபேக்டரி T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில் விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் ‘சாலா’; S.D. மணிபால் இயக்கத்தில் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் விறுவிறுப்பான திரைப்படம்*

*உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 சாலா வெளியாகிறது*

Trailer Link: https://www.youtube.com/watch?v=cg41HyGEMuU&t=62s&pp=ygUNc2FhbGEgdHJhaWxlcg%3D%3D

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, ‘சாலா’ எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது.

சமீபத்தில் வெளியாக இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து ‘சாலா’ டிரைலரை ஆகஸ்ட் 3 அன்று ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெளியிட்டார். இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 ‘சாலா’ வெளியாகிறது

‘சாலா’ படத்தில் தீரன் (அறிமுகம்), ரேஷ்மா வெங்கடேசன் (அறிமுகம்), ‘மெட்ராஸ்’ புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சாலா’ படப்பிடிப்பு நிறைவடைந்து சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் மணிபால், “வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கூடம் (பார்) தான் ‘சாலா’ படத்தின் மையக்கரு. இந்த பாரை கைப்பற்ற சக்தி வாய்ந்த இரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று பெண் ஆசிரியர் ஒருவர் கடும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதல்களை காரமும் சாரமும் குறையாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்,” என்றார்.

இயக்குநர் பிரபு சாலமனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவமுள்ள மணிபால் மேலும் கூறுகையில், “வட சென்னை எனக்கு மிகவும் பிடித்த பகுதி. அங்குள்ள மக்களை பற்றியும், அவர்களது வாழ்க்கை குறித்தும் சினிமாவில் பதிவு செய்ய வேன்டும் என்ற ஆசை எனது முதல் படத்திலேயே நிறைவேறி உள்ளது மிக்க மகிழ்ச்சி. வட சென்னை மக்கள் மட்டுமில்லாமல், அனைத்து ரசிகர்களாலும் ‘சாலா’ பாராட்டப்படும் என நம்புகிறேன்,” என்றார்.

‘சாலா’ திரைப்படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வி. ஸ்ரீ நடராஜும், நிர்வாக தயாரிப்பாளராக விஜயா ராஜேஷும் பங்காற்றியுள்ளனர். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார். கலை இயக்கத்தை வைரபாலன் கவனிக்க, படத்தொகுப்பை புவன், சண்டை பயிற்சியை மகேஷ் மேத்யூ மற்றும் ரக்கர் ராம், நடன இயக்கத்தை நோபுள் கையாண்டுள்ளனர். சவுண்ட் மிக்ஸிங்: லட்சுமி நாராயணன். அந்தோணி தாசன் மற்றும் சைந்தவி பாடல்களை பாடியுள்ளனர். புடொடக்ஷன் எக்சிக்கியூட்டிவ்: வி கே துரைசாமி

ஆகஸ்ட் 23 அன்று பீப்பிள் மீடியா ஃபேக்டரி T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில், S.D. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள‌ ‘சாலா’ திரையரங்குகளில் வெளியாகிறது.

*

*Allu Arjun releases Dheeran-starrer ‘Saala’ trailer, fans appreciate trailer*

*’Saala’, a lively film capturing two powerful groups warring for a popular bar in North Chennai, produced by People Media Factory T.G. Vishwa Prasad and directed by S.D. Manipaul, gears up for grand theatrical release on August 23*

Trailer Link: https://www.youtube.com/watch?v=cg41HyGEMuU&t=62s&pp=ygUNc2FhbGEgdHJhaWxlcg%3D%3D

People Media Factory, a leading production house in Telugu cinema, is releasing its third Tamil film titled ‘Saala’ after giving a blockbuster hit “Vadakkupatti Ramasamy” on a grand scale.

‘Saala’ stars Dheeran (Debut), Reshma Venkatesan (Debut), ‘Madras’ fame Charles Vinod, Aruldoss, Srinath, Sampath Ram, and IT Arasan in pivotal roles. The shoot of ‘Saala’ film has received U/A certificate from the Censor.

The movie is gearing up for theatrical release in Tamil on the 23rd of Aug 2024. The film’s trailer was released by Allu Arjun. The trailer has received positive response from audience.

Speaking about the film, director Manipaul said, “The movie ‘Saala’ is an action-packed drama that explores the themes of power struggles, prestige, and social activism. The setting of the famous Parvathi Bar in Royapuram, which has been shut down for 20 years due to gang wars, creates a rich backdrop for the story.

The two gangs, eager to claim the tender and restore the bar to its former glory, are pitted against each other in a battle for control. Meanwhile, Punitha, a socially conscious school teacher, is determined to shut down the bar for good, adding a third dimension to the conflict. The triangular fight between the two gangs and Punitha sets the stage for a thrilling narrative, full of twists and turns.”

Manipaul, who had worked under director Prabhu Solomon, added: “North Chennai is my favorite place. I am very happy that my desire to record its people and their life in cinema has been fulfilled in my first film itself. Not only the people of North Chennai, but audience of all sections will appreciate ‘Saala’, I hope,” he said.

V. Shree Natraj is the Creative Producer of the film, and Vijaya Rajesh is the Executive Producer. Ravindranath Guru has taken care of cinematography for ‘Saala’, while music has been composed by Theeson. Art direction is handled by Vairabalan, editing by Bhuvan, stunts by Mahesh Mathew and Rugger Ram, and choreography by Noble. Sound Mixing: Lakshmi Narayanan. Anthony Dasan and Saindhavi have crooned for the songs. Production Executive: V.K. Duraisamy.

Produced by People Media Factory