தங்கலான் திரைவிமர்சனம்
எவன் உழுகிரானோ அவனுக்கு தான் நிலம் சொந்தம் என்ற ஒற்றை கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தான் தங்கலான்
தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட உலக தரத்துக்கு இணையான சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் இதுவரை நாம் உலக சினிமாவை ஹாலிவுட் படங்களை பார்த்து பிரமித்து வந்த நமக்கு இந்த படம் அவர்கள் நம்மை பார்த்து பிரமிக்க கூடிய ஒரு படமாக அமைந்திருக்கிறது இதில் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் இல்லாமல் சினிமாவில் பெரிய அனுபவம் இல்லாத தொழில்நுட்ப கலைஞர்களை வைத்துக்கொண்டு உலக தரத்திற்கு இணையான ஒரு படத்தை எடுத்திருப்பது நமக்கு மிகப்பெரும் விஷயம் இந்த தங்கலான் படத்தை நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு திரைப்படம் இப்படி ஒரு காட்சி அமைப்பு இப்படி வரும் மேக்கப் உடைகள் லொகேஷன் சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொரு காட்சியும் உலக தரத்திற்கு இணையாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் நிச்சயம் இந்த படம் தமிழ் சினிமாவின் உச்சக்கட்டம் என்றே சொல்லலாம்.
இந்த படத்தில் விக்ரம்,பசுபதி பார்வதி மாளவிகா மோகனன் ஹரி,மைக்கல் ,. பிரீத்திகரன், மற்றும் பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் கிஷோர் ஒளிப்பதிவில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த இருக்கும் படம் தங்கலான்
முழு படத்தை விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் பசுபதி இவர்கள் தான் முழு படத்தை தாங்கி பிடித்து உள்ளனர் என்று சொன்னால் மிகையாகாது
படத்தின் கதையை பார்க்கலாம்:
வட ஆற்காடு மாவட்டத்தில் வேப்பூர் கிராமத்தில் மிராசுதரும் ஆங்கிலேயர்களும் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமம் விளையும் பொருட்கள் அனைத்தும் மிராசுகும் ஆங்கிலேயர்களுக்கும் சொந்தமாகும் அது மட்டும் இல்லாமல் அந்த கிராமத்து மக்களும் அவர்களின் அடிமை அவர்களிடமிருந்து விடுதலை கிடைக்க தங்கப் புதையலை தேடும் ஒரு ஆங்கிலேயர் அவருக்கு தங்கம் இருக்கும் இடமும் தெரியாது தங்கத்தை தோண்டி எடுக்கவும் தெரியாது இதனால் வேப்பூர் கிராம மக்களை உதவிக்கு அழைக்கிறார். ஆனால் அந்த கிராம மக்கள் யாரும் முன் வரவில்லை அதிலிருந்து விக்ரம் மற்றும் அவரது மகன் டேனியல் அந்த கிராமத்து வைணவம் தலைவர் பசுபதி மற்றும் ஒரு சிலர் மட்டுமே அவர்களுடன் பயணிக்கிறார்கள் இந்த பயணத்தில் இவர்கள் தங்கத்தை எடுத்தார்களா இல்லையா என்பது தான் மீதிக்கதை.
விக்ரம் நடிப்பு நமக்கு புதியது அல்ல ஆனாலும் இந்த படத்தில் புதிய அவதாரத்தை எடுத்து இருக்கிறார்.உலக அளவில் இப்படி ஒரு நடிகன் பார்க்க முடியாது இவர் நம்மின் பொக்கிஷம். ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் நம்மை அசத்துகிறார் முக்கியமாக அவரின் வசன உச்சரிப்பு எல்லாம் நம்மை பிரமிக்க வைக்கிறது.
விக்ரம் மிக சிறந்த நடிகர் என்றால் நான் சிறந்த நடிகை என்று போட்டி போட்டு இருக்கிறார். காட்சிக்கு போட்டி போட்டு நடித்து இருக்கிறார்.ஒரு அந்த காலத்து கிராம பெண்ணாகவே வாழ்ந்து இருக்கிறார்.
இதுவரை ஷோகேஷ் ஆக வளம் வந்த மாளவிகா இந்த படத்தில் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். நானும் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்துள்ளார் சதையை நம்பிய இவர் இந்த முறை இயக்குனரை நம்பி பயணித்துள்ளர்.
பசுபதி நானும் இருக்கிறேன் அதே போல ஹரி படத்துக்கு மிக பெரிய பலம்
இயக்குனர் பா.ரஞ்சித் படம் என்றாலே ஜாதி அரசியல் இருக்கும் ஆனால் இந்த முறை அவர் பாணியில் இருந்து விலகி அரசியல் கலந்த ஒரு ஒரு வரலாற்று கதையை கொடுத்து இருக்கிறார். என்னால் ஜாதி படம் மட்டும் இல்லாமல் உலக தரத்துக்கு என்னாலும் படம் எடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.
படத்தின் மிக பெரிய பலம் என்றால் அது ஜி.வி.பிரகாஷ்குமார் இசை என்றுதான் சொல்லணும். பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி கதையின் தன்மை புரிந்து இசையமைத்துள்ளார். விக்ரம் சொன்னதுபோல நிச்சயம் இந்த படத்துக்கு விருது கிடைக்கும்.
ஒளிப்பதிவாளர் கிஷோர் அவருக்கு இது மூன்றாவது படம் தான் இருந்தும் நம்மை மிரட்டி இருக்கிறார்.
இயக்குனர் பா.ரஞ்சித்