full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள உற்சாகமூட்டக்கூடிய புதிய சுயாதீன பாடல் ‘டாக்ஸிக் காதல்

இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள உற்சாகமூட்டக்கூடிய புதிய சுயாதீன பாடல் ‘டாக்ஸிக் காதல்’.

ஆத்மாவை வருடும் உணர்ச்சிகரமான இசை படைப்புகளால் பரவலாக அறியப்படும் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளர் அருண்ராஜ், ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனுடன் இணைந்து, சமீபத்தில் அவர்களின் புதிய பாடலான ‘டாக்ஸிக் காதல்’-ஐ வெளியிட்டுள்ளனர். அதீத எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த பாடல், நவீன காதல் உறவுகளின் சிக்கல்களை உணர்ச்சிகரமான மெலோடிகள் மற்றும் தைரியமான பாடல்வரிகளின் கலவையால் விவரிக்கிறது.

‘டாக்ஸிக் காதல்’ என்ற இந்த பாடல், காதல் சில நேரங்களில் ஏற்படுத்தக்கூடிய இருண்ட, தீவிரமான மற்றும் மாறும் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துகிறது. தடம், எறும்பு, பிஸ்ஸா-3, பைரி போன்ற வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் இதயங்களை வென்ற அருண் ராஜ், இந்த பாடலுக்கு புதிதாகவும் இதற்கு முன் கண்டிராத இசை வடிவத்தையும் கொண்டு வந்துள்ளார். பாரம்பரிய இசை கூறுகளை நவீன இசைத்துடிப்புடன் கலந்து இசையமைப்பது என்பது அவருக்கு கை வந்த கலை, இதனால் ‘டாக்ஸிக் காதல்’ இன்றைய இசைத்துறையில் தனித்துவமாக திகழ்கிறது.

இந்த பாடலின் மேலும் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்த காலத்தில் அனைவருக்கும் பரிச்சயமான அர்ச்சனா ரவிச்சந்திரனின் பங்களிப்புதான், அவரின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி, இந்த பாடலில் தன் குரலால் மெருகூட்டியுள்ளார். அவரது சிறந்த ஆளுமை மற்றும் ஆழமான உணர்ச்சி வெளிப்பாடு பாடலின் ஆழத்தை அதிகரித்து, காதலினால் ஏற்றத்தாழ்வுகளை அனுபவித்த அனைவரும் தங்களை எளிதில் தொடர்பு படுத்தி கொள்ளக் கூடிய பாடலாக இது மாறுகிறது.

இந்த புதிய கூட்டணியைப் பற்றி அருண் ராஜ் கூறுகையில், “டாக்ஸிக் காதல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பாகும். இந்த பாடலில் உள்ள உணர்வுகள் மிகவும் இயல்பானதும் உண்மையானதுமானவை, அதனால் அந்த உறவின் தீவிரத்தை இசையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்தேன். அர்ச்சனாவுடன் பணிபுரிவது அருமையான அனுபவமாக இருந்தது, நாங்கள் உண்மையில் ஒரு தனித்துவமான படைப்பை உருவாக்கியுள்ளோம் என்று நம்புகிறேன்” என்றார்.

அர்ச்சனா ரவிச்சந்திரனும், “அருண் இந்த படைப்புக்காக என்னை அணுகியதும், ‘டாக்ஸிக் காதல்’ என்ற கரு என்னை உடனடியாக கவர்ந்துவிட்டது. இது நம்மில் பலருக்கும், குறிப்பாக ‘ஜென்-ஸீ'(Generation-Z) என்றழைக்கப்படும் இந்த தலைமுறையினருடன் தொடர்புடையது, மேலும் இந்த இசைப் பயணத்தில் நான் பங்கேற்பது அந்த உணர்வுகளை புதிய வழியில் வெளிப்படுத்த வழிவகுக்கிறது. நாங்கள் உருவாக்கியதை அனைவரும் கேட்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

இந்த பாடலின் இசைக் காணொளி டிப்ஸ் இசை நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடலின் கருப்பொருளுக்கு ஏற்ற காட்சிகளுடன் டாக்ஸிக் காதல் இப்போது அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகியுள்ளது.