நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா.

cinema news Pooja

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா.

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் படபூஜையுடன் துவங்கியது.

விழாவில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படமாக இந்தபடம் துவங்கியிருக்கிறார்கள்.
வர்ஷா விஷ்வநாத் கதாநாயகியாக நடிக்கிறார்

கிராமத்துக்கதையாக உருவாகவிருக்கும் இந்தப்படம் திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

சஸ்பென்ஸ் ,மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா.

விழாவில் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் நாகர்ஜூன், இசையமைப்பாளர் சாம் cs,
கலை இயக்குனர் பாப்ப நாடு C . உதயகுமார். ,
எடிட்டர் வெற்றிகிருஷ்ணன்,

மேனேஜர் துரை சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.