அமரன் திரைவிமர்சனம்
தமிழில் ஏன் இந்தியாவில் இதுவரை எத்தனையோ வரலாற்று சுவடுகள் படமாக்கி உள்ளனர்
ஆனால் இந்த அமரன் போல் ஒரு படம் இதுவரை யாரும் இயக்கியது இல்லை இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கு இரு கரம் கூப்பி வணக்கத்துடன் இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கலாம்.
மேஜர் முகுந்த் அவரின் வாழ்க்கை வரலாற்றை தான் இந்த படமாக உருவாக்கி இருக்கிறார்கள் ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதுவது மிக சுலபம் ஆனால் அதை திரையில் காண்பிக்கும் போது பல தடைகளும் அதோடு ஒவ்வொரு காட்சிகளும் மிக நுண்ணியமாக செயல்படுத்த வேண்டும் அதை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மிக நேர்த்தியாக செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் இதுவரை தமிழில் எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது எத்தனையோ இயக்குனர்கள் அறிமுகம் ஆகி உள்ளனர் தன் முதல் படத்திலேயே அனைத்து மக்களையும் நகிழ வைத்தார் என்று சொன்னால் அது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்று மட்டும் தான் சொல்ல வேண்டும் ஒரு மனிதனை நாம் எப்பொழுது கட்டித் தழுவுகிறோம் என்றால் நம்மை மீறி ஒரு உணர்ச்சி பொங்க நமது வைத்தார்கள் நம்மளை அவர்கள் ஆனந்தப்பட வைத்தார்கள் நம்மை சிறகடிக்க வைத்தார்கள் என்றால் தான் நாம் அவரை கட்டித் தருவோம் அப்படித்தான் இந்த இயக்குனரை கட்டி தவழ வேண்டும். இந்தப் படத்தின் ஒரே கதாநாயகன் யார் என்று சொன்னால் அது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்று தான் சொல்ல வேண்டும் அவருக்கு கரம் கொடுத்த கமலஹாசன் மகேந்திரன் சோனி பிக்சர்ஸ் இவர்களை மிகப்பெரிய அளவில் பாராட்ட வேண்டும்.
படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் இதுவரை அவர் வெளிப்படுத்தாத மிக அற்புதமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த கதையின் உணர்ச்சியையும் உணர்வுகளையும் புரிந்து மிக அற்புதமாக நடித்திருக்கிறார் ஏன் மேஜர் முகுந்தை நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். நண்பா சிவகார்த்திகேயன் இத்தனை நாள் இந்த நடிப்பை எங்கு வைத்திருந்தாய் உன்னை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த படத்தில் உன்னை மிஞ்சி விட்டால் இந்துவாக நடித்த சாய் பல்லவி.
சாய் பல்லவி ஆட்டம் பாட்டம் கலகலப்பு நகைச்சுவை இப்படி வந்த ஒரு நடிகை தன்னால் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை மேஜர் முகுந்து அவர்களின் மனைவியை இந்துவாகவே வாழ்ந்திருக்கிறார். இந்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் ஐயோ காட்சிக்கு காட்சி நம்மை மிரள வைக்கிறார் நெகிழ வைக்கிறார் கண்களில் கண்ணீரை வர வைக்கிறார். நிச்சயமாக இந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருது காத்திருக்கிறது அவருக்கு மட்டும் அல்ல இயக்குனர் நாயகன் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் என அனைவருக்கும் இந்த படத்திற்கு நிச்சயமாக தேசிய விருது காத்திருக்கிறது.
படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் இது ஒரு திரைப்படம் அல்ல வாழ்க்கை என்று வாழ்ந்துள்ளனர். அம்மாவாக நடித்த கீதா கைலாசம் அப்பாவாக நடித்த அவர் புதுமுக நடிகர் மற்றும் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அற்புதமான நடிப்பு வெளிப்படுத்தி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு வலு சேர்த்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தை தாங்கி நிற்த்தி இருக்கிறார்கள்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை மேஜர் முகுந்தின் வாழ்க்கையை மிக நுண்ணியமாக கவனித்து ஆராய்ந்து ஆராய்ச்சி செய்து படமாக்கி இருக்கிறார் அதற்காக அவருக்கு மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் இந்த படத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் மேஜர் முகுந்த் எப்படிப்பட்ட ஒரு நேர்மையான ராணுவ அதிகாரி மட்டுமல்லாமல் தமிழ் மேல் எப்பேர்பட்ட பற்று வைத்திருக்கிறார் என்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வெளிப்படுத்தி உள்ளார்.
காஷ்மீரில் ராணுவ அதிகாரிகள் எப்படியெல்லாம் அவதியில் உள்ளாயிருந்தார்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் தன் நாட்டைக் காப்பாற்ற எந்த அளவிற்கு செல்கிறார்கள் என்று மிக அற்புதமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எத்தனையோ ராணுவ கதை கொண்ட படங்கள் வந்திருந்தாலும் இப்படி ஒரு நேர்த்தியான ஒரு படத்தை இதுவரை இந்திய சினிமாவில் நாம் பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கு கோடி வணக்கங்கள் வார்த்தைகள் இல்லை பாராட்ட அனைவரும் அவசியம் கண்டுகளிக்க வேண்டிய மன்னிக்கவும் திரையரங்கில் சென்று வாழ வேண்டிய ஒரு படம்
மொத்தத்தில் அமரன் தமிழ் சினிமாவின் உயிர் இந்திய சினிமாவின் அடையாளம் ராணுவ வீரர்களின் மரியாதை இதுதான் இந்த அமரன்