கங்குவா – திரை விமர்சனம் (பிரம்மாண்டம் பிரம்மிப்பு) 4/5
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. படத்தின் தயாரிப்பாளர் தொடங்கி ஒளிப்பதிவாளர் வரை அத்தனை பேரும் படத்தை பற்றி ஹைப் ஏற்றியிருந்தனர். அதனை எல்லாம் நிஜமாக்கியதா படம் வாங்க பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி சூர்யா கோவாவில் ஒரு பவுண்டி ஹண்டராக இருக்க, கே எஸ் ரவிகுமார் சொல்லும் வேலைகளை செய்து வருகிறார், அப்போது ஒரு சிறுவன் சூர்யாவிடம் வர, அவனை தேடி மிகப்பெரிய ரஷ்யா கும்பல் ஒன்று வருகிறது. அவர்கள் அந்த சிறுவனை வைத்து ஏதோ எக்ஸ்பிரிமெண்ட் செய்து வருகின்றனர், அந்த சிறுவனை ரஷ்யா கும்பல் தூக்கி செல்ல, அங்கிருந்து கதை கற்காலத்திற்கு செல்கிறது. 5 நிலங்கள் கொண்ட ஒரு ஊரில், ரோமானிய அரசன் அந்த 5 நிலங்களை கைப்பற்ற நினைக்க, போஸ் வெங்கட்டை வைத்து 5 நிலங்களை கைப்பற்ற முடிவு செய்கின்றனர்.
போஸ் வெங்கட் பெருமாச்சி, அராத்தி நிலத்திற்கும் எப்படியோ சகுனி வேலை பார்த்து சண்டை மூட்டிவிட, பிறகு பெரிய போர் உருவாகிறது. இந்த போரில் வெற்றி யாருக்கு, நிகழ் காலத்தில் அந்த சிறுவன் என்ன ஆனான், என்பதே மீதிக்கதை. கதையாக பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனை திரைக்கதையாக கொடுத்து ஒரு பிரம்மாண்ட சினிமாவை நமக்கு கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தில் சூர்யாவின் நடிப்பு மிகப் பெரிய பலம்.தனி ஒருவனாக படத்ததை தூக்கி சுமக்கிறார். பெருமாச்சி பழங்குடியின தலைவனாக அதகளம் செய்துள்ளார். தற்காலத்தில் வாழும் பிரான்சிஸ் என்ற கதாபாத்திரத்தில் ஜாலி சூர்யாவை பார்க்க முடிகிறது. நடிப்பில் நம்மை மிரட்டி இருக்கிற காட்சிக்கு காட்சி இப்படி ஒரு மகா கலைஞனை பார்த்து ரசிக்க பெருமையாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தில் சிறிது நேரம் வந்தாலும் நட்டி கருணாஸ் தன் பங்கை மிகச் சிறப்பாக செலுத்தி இருக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். என்று தான் சொல்ல வேண்டும் குறிப்பாக நட்டியின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
படத்தில் நடித்த அனைவருமே தன் பங்கை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். இயக்குனரின் எண்ணத்தை முழுமையாக அறிந்து செயல்பட்டுள்ளனர். தமிழில் பாபி தியோல் முதன்முறையாக வில்லனாக களம் இருக்கிறார். இந்தப் படம் தமிழில் அவருக்கு முதல் படமா என்று வேக்கி வைக்கும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இந்தியில் எத்தனையோ படங்கள் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் அவருடைய நடிப்பு பிரமிக்க வைக்கிறது.
வெற்றியின் கேமிரா அற்புதம் செய்துள்ளது. படத்தின் பலம் அதன் டெக்னிக்கல் டீம் தான். விஎஃப்எக்ஸ் நன்றாக உள்ளது. எடிட்டிங் படத்தின் திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் சில நேரங்களில் இது தமிழ் படமா இல்லை ஆங்கில படமா என்று வியக்கும் அளவிற்கு ஒரு அற்புதமான திரை கதையை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சிவா . படத்திற்கு மேலும் ஒரு பக்க பலம் என்று சொன்னால் படத்தின் சண்டைக் காட்சிகள் ஒவ்வொரு சண்டை காட்சி மிகவும் தத்ரூபமாக அமைத்திருக்கிறார் சண்டை பயிற்சியாளர் சில நேரங்களில் இந்திய படமா என்று சொல்லக்கூடிய அளவிற்கு சண்டைக் காட்சிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு துறையினரும் இயக்குனரின் எண்ணத்தையும் இயக்குனரின் முயற்சியையும் மனதில் ஏற்றுக்கொண்டு மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இதற்காக அனைவருக்கும் ஒரு சபாஷ் சொல்லலாம்.
மொத்தத்தில் கங்குவா நம்மை மிரட்டுகிறார். பிரமிக்க வைக்கிறார் கவருகிறார். ரசிக்க வைக்கிறார்.