ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும். ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது
முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த மெகா என்டர்டெய்னர் படமான ‘சூர்யா 45’ படத்தின் பூஜை, இன்று ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது.
அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் மற்றும் ஓக்கே ஓக்க ஜீவிதம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். அனைவரும் ரசிக்கும்படியான, காமெடி கலந்த ஆக்ஷன் என்டர்டெய்னராக, இப்படம் உருவாகவுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். இது தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
இன்றைய பூஜைக்குப் பிறகு, ஆர்ஜே பாலாஜி கோயம்புத்தூரில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்தவுள்ளார். இப்படப்பிடிப்பில், சூர்யா மற்றும் பிற முன்னணி நடிகர்கள் இடம்பெறும் முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர்.
இப்பிரம்மாண்ட திரைப்படத்தை, தயாரிப்பாளர்கள் எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.