புதிய திறமைகளை கண்டறிவதற்கும், காலத்தால் அழிக்க முடியாத கதைகளை சொல்லவதற்குமான ‘ஆஹா ஃபைண்ட்’ முன்முயற்சியை தொடங்கியுள்ள ஆஹா தமிழ், முதல் வெளியீடு ‘பயாஸ்கோப்’
உலகளாவிய தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்கள் விரும்பும் முன்னணி ஓடிடி தளமான ஆஹா, துணிச்சலான மற்றும் புதுமையான உள்ளடக்கத்தை தொடர்ந்து வழங்க உறுதிபூண்டுள்ளது. ஆஹா ஃபைண்ட் எனும் புதுமையான முன்னெடுப்பை இன்று அறிவிப்பதில் ஆஹா பெருமிதம் கொள்கிறது. புதிய திறமைகளை கண்டறிவதற்கும், காலத்தால் அழிக்க முடியாத கதைகளை சொல்லவதற்குமான சாளரமாக ‘ஆஹா ஃபைண்ட்’ திகழும்.
வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சொல்லப்படாத கதைகளுக்கு உலகளாவிய அரங்கை ‘ஆஹா ஃபைண்ட்’ முன்முயற்சியின் வாயிலாக வழங்குவதன் மூலம் தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதை ஆஹா தமிழ் நோக்கமாகக் கொண்டுள்ளது. திரைப்பட உரிமத்திற்கான நம்பகமான சந்தையான புரொடியூசர் பஜார் உடன் இணைந்து ‘ஆஹா ஃபைண்ட்’ அதன் பயணத்தை தொடங்கி உள்ளது.
ஆஹா ஃபைண்ட்டின் முதல் வெளியீடான பிரபல இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பயாஸ்கோப்’ கிராமிய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சேரன் ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடித்துள்ளனர். தாஜ்நூரின் தனித்துவமிக்க இசையமைப்புடன். செழுமையான கதைசொல்லல் மற்றும் புதுமையான படைப்பாக்கத்தின் கலவையான ‘பயாஸ்கோப்’, ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது.
ஆஹா தமிழின் உள்ளடக்கம் மற்றும் வியூகங்கள் பிரிவின் மூத்த துணைத் தலைவர் கவிதா ஜௌபின் கூறுகையில், “துணிச்சலான மற்றும் தனித்துவமான கதைசொல்லலில் ஆஹா தமிழ் எப்போதும் முன்னணி வகிக்கிறது. ‘ஆஹா ஃபைண்ட்’ மூலம் இந்த உறுதிப்பாட்டை நாங்கள் மேலும் வலுப்படுத்துகிறோம். வளர்ந்து வரும் திறமைகளுக்கு ஊக்கமளிப்பது மற்றும் சொல்லப்படாத கதைகளுக்கு உலகளாவிய அரங்கை வழங்குவது எங்கள் நோக்கமாகும்,” என்றார்.
புரொடியூசர் பஜார் உடனான ஒத்துழைப்பு குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்திய கவிதா மேலும் கூறியதாவது: “புதுமையான மற்றும் ஊக்கமளிக்கும் திரைப்படமான பயாஸ்கோப் உடன் புரொடியூசர் பஜார் எங்களை அணுகியபோது, அவர்களுடன் இணைந்து இந்தப் படம் அதன் உரிய இடத்தை அடைய வைக்க உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்,” என்றார்.
புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு பேசுகையில், “ஆஹா தமிழின் ‘ஆஹா ஃபைண்ட்’ முயற்சியின் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் சினிமா எப்போதுமே தலைசிறந்த திறமைகளின் தாயகமாக இருந்து வருகிறது, இந்த தளம் அத்தகைய கதைகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லும். ‘பயாஸ்கோப்’ தொடங்கி மேலும் பல அற்புதமான திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஆஹாவுடன் இணைந்து வழங்க காத்திருக்கிறோம்,” என்றார்.
தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை செழுமையாக்குவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, சிறந்த கதைகளைக் கண்டறிந்து அவற்றை உலகத் திரைகளுக்குக் கொண்டுவருவதை ஆஹா தமிழ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆஹா ஃபைண்ட் வெறும் திரைப்பட தளமாக மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறை தமிழ் படைப்பாளிகளை ஊக்குவித்து, ஆதரித்து, கொண்டாடுவதர்கான ஒரு இயக்கமாக செயல்படும். இந்த அற்புதமான பயணத்தில் இணைய அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கதைசொல்லிகள் மற்றும் சினிமா சமூகத்தை சேர்ந்தவர்களை ஆஹா அழைக்கிறது. புதிய திறைமைகள் மற்றும் சொல்லப்படாத கதைகளை வெளிக்கொணர்வதன் மூலம், படைப்பாற்றலுக்கு பரந்த தளத்தை உருவாக்குவதை ஆஹா நோக்கமாகக் கொண்டுள்ளது.
aha Tamil launches ‘aha Find’ to spotlight new voices and timeless tales, debuts with ‘Bioscope’
Chennai, December 24, 2024 – aha OTT, the leading regional streaming platform serving Telugu and Tamil audiences worldwide, continues its commitment to bringing bold, innovative content to the forefront. Today, the platform proudly announced the launch of its pioneering initiative, ‘aha Find’, designed to unveil new voices and crafting timeless tales.
Under the banner of ‘aha Find’, aha Tamil aims to elevate the diverse world of Tamil cinema by providing a global stage for emerging filmmakers and untold stories. The inaugural collaboration for ‘aha Find’ comes with a significant partnership with ProducerBazaar, a trusted marketplace for movie rights licensing.
The debut offering, ‘Bioscope’, is directed by acclaimed filmmaker Sankagiri Rajkumar. This rural biographical drama stars celebrated actors Sathyaraj and Cheran in special roles, with a compelling musical score by Tajnoor. A fusion of rich storytelling and creative brilliance, Bioscope promises a unique and immersive cinematic experience.
In her statement, Kavitha Jaubin, Senior Vice President – Content and Strategy at aha Tamil, expressed her excitement for the new initiative, “aha Tamil has always championed bold and unique storytelling. With ‘aha Find,’ we’re reinforcing our commitment to strengthening the emerging talent and giving a global stage to untold stories. This is not just about discovering new films; it’s about empowering potential creators with the support and visibility they deserve in the dynamic Tamil cinema landscape.”
Expressing enthusiasm for the collaboration, Kavitha added:
“When Producer Bazaar approached us with the innovative and inspiring movie Bioscope, we were thrilled to partner with them and help this project reach its full potential.”
G.K. Tirunavukarasu, Founder & CEO of Producer Bazaar, said, “We are thrilled to be a part of aha Tamil’s ‘aha Find’ initiative. Tamil cinema has always been home to exceptional talent, and this platform will allow us to showcase those stories to a global audience. ‘Bioscope’ is just the beginning, and we look forward to working with Aha to bring many more groundbreaking films and series to life.”
‘aha Find’ offers a beacon of hope and support for aspiring filmmakers and storytellers, giving them the opportunity to reach a global audience and realize their creative visions. This initiative celebrates the vibrant Tamil content community and invites all creative minds to be a part of this exciting journey.
As part of the platform’s ongoing commitment to fostering Tamil cinema’s future, aha Tamil aims to unearth extraordinary stories and bring them to global screens. By offering talented filmmakers the visibility and resources they deserve, ‘aha Find’ strives to shape the future of Tamil storytelling.
As the platform continues its journey, aha Tamil invites members of the creative community to join hands and help discover the next generation of exceptional Tamil films and series.