திரு மாணிக்கம் – திரைவிமர்சனம் 3.5/5
பொதுவாக சமுதிராகணி படம் என்றாலே ஒரு சிறந்த கருத்தை வெளிபடுத்தும் இந்த திரு மாணிக்கமும் மனிதாபிமானம் மற்றும் ஒரு தனி மனித ஒழுங்கிணத்தையும் சொல்லும் படம் தான் இந்த திரு மாணிக்கம்.
இந்த படத்தில் சமுத்திரக்கனி,பாரதிராஜா,இளவரசு,தம்பி ராமையயா, நாஸர்,சின்னி ஜயந்த , அனன்யா,கிரேஸ் வடிவுகரசி, மற்றும் பலர் நடிப்பில் விஷால் சந்திரசேகர் இசையில் மைனா சுகுமார் ஒளிப்பதிவில் நந்தா பெரியசாமி இயக்கதில் வெளிவந்து இருக்கும் படம் தான் திரு மாணிக்கம்
கதைக்குள் பயணிக்கலாம்…
தமிழக – கேரள எல்லைப் பகுதியான குமுளி தான் படத்தின் கதைக்களம். அங்கு ஒரு லாட்டரி கடை நடத்தி தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி.
இவருக்கு மனைவியாக வருபவர் அனன்யா. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது பெண் மகளுக்கு பேச்சு சரிவர வராததால், அவருக்கு ஆபரேஷன் பண்ண வேண்டிய சூழல். ஆப்ரேஷனுக்கு பல லட்சம் ரூபாய் ஆகுமென மருத்துவர்கள் கூறி விடுகின்றனர்.
தனது மகளை வரதட்சணை கேட்டு நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல், வீட்டிற்கு திருப்பி விட்டதை நினைத்து கண்கலங்கி நிற்கிறார் பாரதிராஜா. அப்போது, தனக்கு அதிர்ஷடமாவது அடிக்கட்டும் என சமுத்திரக்கனியின் கடையில் லாட்டரி ஒன்றை வாங்குகிறார். ஆனால், அதை வாங்குவதற்கு பணம் இல்லாததால், பணத்தைக் கொடுத்து அந்த லாட்டரியை வாங்கிக் கொள்வதாகவும் அதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி சென்று விடுகிறார் பாரதிராஜா.
சமுத்திரக்கனியும் அப்படியே செய்ய, எடுத்து வைத்த லாட்டரிக்கு ஒன்றரை கோடி ரூபாய் பம்பர் விழுகிறது. நேர்மையை தனது உயிராக வைத்திருக்கும் சமுத்திரக்கனி, அந்த லாட்டரியை எடுத்துக் கொண்டு யாரென்றே தெரியாத பாரதிராஜாவை தேடிச் செல்கிறார்.
இதை அறிந்த அனன்யா, குடும்ப கஷ்டத்தை வைத்து அப்பணம் நமக்கு தான் சொந்தம் என வாதமிட, தொடர்ந்து உறவினர்களும் சமுத்திரக்கனிக்கு நெருக்கடி கொடுக்க, யார் பேச்சையும் கேட்காமல் பாரதிராஜாவை தேடிச் செல்கிறார் சமுத்திரக்கனி.
இறுதியில் சமுத்திரக்கனியின் நேர்மை வென்றதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் சமுத்திரக்கனி, மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தை தனது உள்ளோட்டமாக நினைத்து ஏற்று நடித்திருக்கிறார். ஒரு குடும்பஸ்தனாக இருக்கும் போதாக இருக்கட்டும், தனது மகள்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் இடத்திலாக இருக்கட்டும், எந்த இடத்திலும் தனது நேர்மையை விட்டுக் கொடுக்காத பண்பாக இருக்கட்டும் என பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
சமுத்திரக்கனியின் மனைவியாக அனன்யா பொருத்தமாக நடித்திருந்தாலும், ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை கொடுக்காமல் இல்லை. அதிலும் பாரதிராஜா தன் காதபாத்திரத்தின் தன்மை அறிந்து மிக அற்புதமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
இப்படத்தில் தம்பி ராமையாவை சமுதிராகணியுடன் ஒரு சிறு காதப்பத்திரதில் வருகிறார் வரும் காட்சிகளில் நம்மை கவருக்கிறார். படத்தில் மற்ற கதாபாத்திரங்களான நாசர், கருணாகரன், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி என படத்தில் நடித்த நடிகர்கள் தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது.
அதேசமயம், ஒலிப்பதிவு கண்களுக்கு மிகவும் குளிர்ச்சி பின்னணி இசை கதைக்கு பலம் விஷால் சந்திரசேகர் இசை என்றாலே அதில் ஒரு உயிரோட்டம் காண்போம் அது இதிலும் இருந்தது
இயக்குனர் நந்தா பெரியசாமி ஒரு ஆழமான கதையில் அற்புதமான திரை கதை மூலம் நம்மை கவருக்கிறார் அதோடு மிக சிறந்த கருத்தையும் கூறியுள்ளார்.நமக்கு என்ன தான் தேவைகள் இருந்தாலும் நாம் நேர்மையை எந்த நேரத்திலும் இழந்து விடகோவாடாது என்பதை மிக அழுத்தமாக கூறியிருக்கிறார்.