கேம் சேஞ்சர் – திரைவிமர்சனம் 3/5

cinema news movie review

கேம் சேஞ்சர் – திரைவிமர்சனம் 3/5

தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி, முன்னணி நடிகர் ராம் சரணின் நடிப்பிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முரட்டுத்தனமான மற்றும் பொருத்தமற்ற முதல் பாதியால் எடைபோடப்பட்டது. வெடிக்கும் அதிரடி ஹீரோ ஆளுமை.

நட்சத்திரம் போதுமான அளவு பிரகாசமாக பிரகாசிக்கிறது, ஆனால் தலைப்புஏற்ப படத்தின் கதைகளும் காட்சிகளும் அமையவில்லை .

முரட்டுத்தனமான இளைஞன் ராம் சரண் காதலியின் ஆணைக்காக ஐ ஏ எஸ் தேர்வு எழுதுகிறார்.ஆனால் ஒரு சில மார்க் குறைவால் ஐ,பி.எஸ். ஆகிறார்.இதனால் காதலி விட்டு பிரிகிறார்கள். இதற்காகமீண்டும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தன் சொந்த ஊருக்கு கலெக்டராக வருகிறார் ராம் சரண் இங்கு தான் கதையின் நோக்கம் ஆரம்பிக்கிறது. ஆளும் முதல் அமைச்சர் தன் தவறால் இந்த நாடு லஞ்சத்தில் மற்றும் தவறான போக்கில் மக்கள்படும் கஷ்டத்திற்கு இருக்கும் ஒரு ஆண்டில் மக்களுக்கு தேவையானது செய்யலாம் என்று பார்க்கிறார்.ஆனால் மகன் எஸ்.ஜெ.சூர்யா அதற்க்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். முதல்வரை கொன்று தான் முதல்வர் ஆகவேண்டும் என்று நோக்குடன் அவரை கொள்கிறார். நாம் தான் அடுத்த மூத்தவர் என்று நினைக்கும் போது இயக்குனர் மிக பெரிய ட்விஸ்ட் வைக்கிறார்

ராம் சரண் தான் அடுத்த முதல்வர் என்று வீடியோ வாக்குமூலம் கொடுத்து இறக்கிறார் . ஆனால் ராம் சரண் நான் இந்த பதவியை ஏற்கமாட்டேன் என்றுசொல்லி எஸ்.ஜெ.சூர்யாவை முதல்வர் ஆக்குகிறார் அந்த பதவியை எஸ்.ஜெ.சூர்யா மிக மோசமாக பயன்படுத்துகிறார்.இதனால் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள் இதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை

பழைய முதல்வன் மற்றும் பல ஷங்கர் படங்களை ஒரு மிக்சியில் போட்டு அரைத்து கொடுத்து இருக்கிறார். ஷங்கர் முதல் பாதி வளவள என்று போகிறது இரண்டாம் பாகம் கொஞ்சம் சூடுபிடிக்கிறது படத்தில் லாஜிக்கியும் இல்லை மேஜிக்கும் இல்லை பிரமாண்டம் மட்டுமே உள்ளது.

ராம்சரண் உயிரை கொடுத்து நடித்து இருக்கிறார். தன் அப்பாவின் அரசியல் எதிர்க்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் அமையும் வகையில் கதை திரைக்கதை அமைத்துள்ளார்கள்

கியார அதானி நல்ல அழகு பொம்மை போலவே வந்து செல்கிறார்.அஞ்சலி அந்த கதாபாத்திரம் கொஞ்சம் நம்மை இயல்பாக உள்ளது.மற்றபடி அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தைமிக அழகா நடித்து உள்ளனர்.
குறிப்பக எஸ்.ஜே .சூர்யா படத்தை தாங்கி நிற்கிறார்.

தமன் இசையில் பாடல்கள் ஒன்றும் ரசிக்கும் படி இல்லை பின்னணி இசை பலம்

மொத்தத்தில் கேம் சேஞ்சர் ஆட்டம் இல்லை

கேம் சேஞ்சர் – திரைவிமர்சனம்