”தி ரைஸ் ஆஃப் அசோக” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு
லூசியா படப்புகழ் அபிநயா சதுர் சதீஷ் நீனாசம், இயக்குநர் வினோத் டோண்டேலே இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “தி ரைஸ் ஆஃப் அசோக” என்ற படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியப்படமாக உருவாகும் இப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
“தி ரைஸ் ஆஃப் அசோக” படத்தின் 80% படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் மற்ற தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில முக்கிய வசனக் காட்சிகள் மற்றும் பாடல்கள் உட்பட மீதமுள்ள பகுதிகள், விரைவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டரில், சதீஷ் நீனாசம் முரட்டுத்தனமான தோற்றத்தில், கத்தியை ஏந்தியபடி, இருக்கும் தோற்றம், ரெட்ரோ காலக் கதையின் மையத்தைக் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. சதீஷின் கேரியரில் மிக முக்கிய, பிரம்மாண்டத் திரைப்படமாக இப்படம் உருவாகிறது.
மிக அழுத்தமான அதிரடித் திரைப்படமாக உருவாகும், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, பிப்ரவரி 15 அன்று மீண்டும் தொடங்கவுள்ளது. விருத்தி கிரியேஷன் மற்றும் சதீஷ் பிக்சர்ஸ் ஹவுஸ் பேனர்களின் சார்பில் வர்தன் நரஹரி, ஜெய்ஷ்ணவி மற்றும் சதீஷ் நீனாசம் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் சதீஷ் நீனாசம் நாயகனாக நடிக்க அவருடன், பி.சுரேஷ், அச்யுத் குமார், கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே, சம்பத் மைத்ரேயா, யாஷ் ஷெட்டி போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக லாவிட், கலை இயக்குநராக வரதராஜ் காமத், இசையமைப்பாளராக பூர்ச்சந்திர தேஜஸ்வி எஸ்.வி, ஆக்ஷன் இயக்குநர்களாக டாக்டர் ரவிவர்மா மற்றும் விக்ரம் மோர், எடிட்டராக மனு ஷெட்கர் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகிறார்கள். தி ரைஸ் ஆஃப் அசோக ஒரு சக்திவாய்ந்த, உள்ளடக்கம் நிறைந்த படமாக உருவாகிறது, இது மூன்று மொழிகளிலும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் படைப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.