தருணம் – திரைவிமர்சனம் 3.5/5
அருள்நிதி நடித்த தேஜாவு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசனின் அடுத்த படைப்புதான் தருணம் இதுவும் ஒரு திரில்லர் ஜானரில் பயணித்துள்ளார். முதல் படத்தில் கிடைத்த வெற்றியை இந்த படத்திலும் தக்கவைத்து இருக்கிறா இல்லை கோட்டை விடுகிறா என்று பார்ப்போம்.
இந்த படத்தில் நாயகனாக கிஷன் தாஸ், நாயகியாக ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா, கீதா கைலாசம், பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் தர்புகா சிவா இசையில் அஷ்வின் ஹேமந்த் (பின்னணி இசையில்) ZHEN ஸ்டுடியோஸ் – புகாஜ் மற்றும் ஈடன் தயாரிப்பில் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தருணம்.
கதைக்குள் போகலாம்;
மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியான நாயகன் கிஷன் தாசும், நாயகி ஷ்ம்ருதி வெங்கட்டும் பழகி காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கிறார்கள். அதன்படி இன்னும் சில நாட்களில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடக்க உள்ள நிலையில், ஷ்ம்ருதி வெங்கட்டின் வீட்டிற்குள் நுழையும் ராஜ் அய்யப்பா ஒரு தலையாக காதலாக ஷ்ம்ருதி வெங்கட் காதலிக்கிறார்.இந்த நிலையில் ராஜ் அய்யப்பா திடீரென இறந்து விடுகிறார். தனது வருங்கால மனைவியை சிக்கலில் இருந்து காப்பாற்ற முயலும் கிஷன் தாஸ், யாருக்கும் தெரியாமல் உடலை அப்புறப்படுத்தி, ராஜ் அய்யப்பாவின் மரணத்தில் யாருக்கும் சந்தேகம் வராத சூழலை உருவாக்க முடிவு செய்கிறார். இந்த முட்டிவை எப்படி அரங்கேற்றுகிறார் என்பது தான் மீதி கதை
கண்காணிப்பு கேமராக்கள், காவலர்கள் மற்றும் ஆட்கள் சூழ, பரபரப்பான அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து ராஜ் அய்யப்பாவின் உடலை அகற்றி கொலை வழக்கில் இருந்து நாயகனும், நாயகியும் தப்பிக்கும் சுவாரசியமான கதை ‘தருணம்’.
இயக்குனர் அரவிந்த் சீனிவாசன், எதிர்பாராத தருணத்தில் நிகழும் ஒரு கொலையையும், அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஹீரோவின் புத்திசாலித்தனத்தையும் உள்ளடக்கிய ஒரு சுவாரசியமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை திரைப்படத்தை வழங்கியுள்ளார்.
நாயகன், நாயகியின் அறிமுகம், அவர்களின் சந்திப்பு, நட்பு, காதல் காட்சிகள் என முதல் பாதியை வழக்கமான படம் போல நகர்த்திச் சென்றாலும், இரண்டாம் பாதியில் கொலைக் குற்றத்தில் இருந்து தப்பிக்க நாயகனின் திட்டம், அதை நிறைவேற்றும் விதம். படம் வேகமாக நகர்ந்து பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறது.
கொலையை மறைக்க குற்றவாளிகள் பயன்படுத்தும் வழக்கமான முறைகளை விட்டுவிட்டு, இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் கையாண்ட புதிய யுக்தி, மற்ற க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர்களில் இருந்து படத்தை வேறுபடுத்தி, அந்த உத்தியை பார்வையாளர்களிடம் எப்படி செயல்படுத்துவது என்ற கேள்வியை எழுப்பி, ஆசையை தூண்டுகிறது. பதிலை அறிய, அதன் மூலம் சதித்திட்டத்துடன் ஒன்றாக மாறுகிறது.
குற்றத்திலிருந்து தப்பிப்பது எப்படி என்ற பதற்றத்தையும் பயத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தும் ஷ்ம்ருதி வெங்கட், தெளிவான திட்டங்களின் மூலம் கொலையை தற்கொலையாக மாற்ற முயலும் கிஷன் தாஸ் இருவரும் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
முக்கிய வேடத்தில் நடிக்கும் ராஜ் அய்யப்பா, அவரது அம்மாவாக வரும் கீதா கைலாசம், ஹீரோவின் நண்பனாக வரும் பாலசரவன் ஆகியோருக்கு குறைவான காட்சிகள் இருந்தாலும், படம் முழுவதையும் நிரப்பும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கதைக்களத்திற்கு பாடல்கள் தேவையில்லை என்றாலும், தர்புகா சிவா இசையமைத்துள்ள பாடல்கள் கேட்கத் தக்கவை. அஸ்வின் ஹேமந்தின் பின்னணி இசை, க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையின் வழக்கமான உருட்டல், அச்சுறுத்தும் ஒலிகள் இல்லாமல் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைகளுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான வண்ணத் திட்டத்தைத் தவிர்த்து, இயற்கையாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
எடிட்டர் அருள் இ.சித்தார்த்தின் பணி சிறப்பானது, நாயகனின் திறமையை மிகவும் சவாலான செயலை பார்வையாளர்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும்படி காட்சிகளை எடிட் செய்துள்ளார்.
க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர்களை உடைத்து வித்தியாசமான பாதையில் பயணித்த இயக்குனர் அரவிந்த் சீனிவாசன், பட்ஜெட் நெருக்கடியால் முதல் பாதியில் சில இடங்களில் தடுமாறினாலும், இரண்டாம் பாதியில் தனது வலுவான திரைக்கதையால் பார்வையாளர்களை இருக்கையில் ஒட்ட வைக்கிறார். கணிக்க முடியாத திருப்பங்கள்.
மொத்தத்தில் ‘தருணம்’ எல்லோரும் வரணும்