காதலிக்க நேரமில்லை – திரைவிமர்சனம் 3.5/5

cinema news movie review

காதலிக்க நேரமில்லை – திரைவிமர்சனம் 3.5/5

இயக்குனர் கிருத்திகா உதயநிதி படங்கள் என்றாலே ஒரு கவித்துவமான கதைகளாக தான் அமையும் அந்த வகையில் இந்தப் படமும் ஒரு முக்கோண காதலையும் மறைமுகமான பெண்ணாதிக்கத்தையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி

காதலிக்க நேரமில்லை இந்த படத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் வினை யோகி பாபு லால் டிஜே பானு ஜான் கொக்கின் வினோதினி வைத்தியநாதன் லட்சுமி ராமகிருஷ்ண பாடகர் மனோ மற்றும் பலர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெய்ன்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம காதலிக்க நேரமில்லை

கதைக்குள் போகலாம் ,:

ரவி டிஜே பானு இருவரும் காதலிக்கிறார்கள் பானுவிற்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை ஆனால் ஜெயம் ரவிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை. இதனால் இந்த காதல் ஜோடி பிரிகிறது அதேபோல நித்தியா மேனனும் ஜான் கொகேனும் காதலிப்பார்கள் ஆனால் ஜான் கொக்கின் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் பிரிந்து விடுகிறார்கள். இருப்பினும் நித்தியா மேனனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை ஆனால் ஆண் துணை இல்லாமல் குழந்தை பெற்றுக் கள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஐவிஎஃப் மூலம் குழந்தையை பெற்றெடுக்கிறார். இந்த நிலையில் ஜெயம் ரவியும் நித்யா மேனன் சந்திக்க இருவரின் நட்பு காதலாக மாறுகிறது இந்த காதல் கைகூடியதா இல்லையா என்பது தான் மீதிக்கதை.

இயக்குனர் கிருத்திகா நீதி ஒரு கவித்துவமான காதல் கதையை எடுத்துக்கொண்டு அதை மிகவும் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கத்தி மேல் நடப்பது போலான ஒரு கதை காரணம் பெண்ணாதிக்கத்தை பற்றி இந்த படத்தில் மிகவும் நாசுக்காக பேசியிருக்கிறார். ஒரு பெண் ஆண் துணை இல்லாமல் குழந்தை பெற்று எடுப்பதை பற்றியும் ஆண் விந்து வங்கி பற்றியும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

ஆண் துணை இல்லாமல் ஆணின் விந்து வைத்து ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் ஆனால் ஒரு ஆண் இல்லை என்றால் ஒரு குழந்தை வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்பதை மிக அழகாக தன் திரைக்கதை மூலம் கூறியிருக்கிறார். இதற்காகவே இயக்குனர் கிருத்திகா உதயநிதி பாராட்ட வேண்டும். மிக நேர்த்தியான திரைக்கதை மூலம் யார் மனதையும் நோகவிடாமல் மிக ஆழமான கருத்தை அழகாக கூறியிருக்கிறார் கிருத்திகா.

ரவி படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும் தன் கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக உணர்ந்து அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் காட்சிக்கு காட்சி நம்மை ரசிக்க வைக்கிறார் நித்தியா மேனனிடம் தன் காதலை வெளிப்படுத்த முடியாமலும் அதே நேரத்தில் டிஜேபானம் நித்யா மேனனும் சந்திக்கும் இடத்தில் அவரின் தவிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். எப்பவும் போல நகைச்சுவையிலும் கலக்கியிருக்கிறார்.

நித்யா மேனன் அவர் நடிப்பை நாம் என்ன சொல்வது அனைவரும் எப்போது பிரமிக்க வைப்பார் அதேபோல இந்த படத்திலும் மிக அற்புதமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி நமது ரசிக்க வைக்கிறார். ஒரு எட்டு வயது குழந்தைக்கு தாயாகவும் அதேபோலஇளம் வயது காதலியாகவும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்.

டிஜே பானு சிறிய கதாபாத்திரம் என்றாலும் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன் உடல்வாகுக்கேற்ற உடைகளை அணிந்து இருந்தால் இன்னும் கொஞ்சம் அழகாகவே இருந்திருப்பார்.

எப்பவும் போல யோகி பாபு நம்மை சிரிக்க வைக்கிறார் அவருடன் பயணிக்கும் வினய் சிறிய கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். நல்ல வேலைக்கு இதில் வில்லன் இல்லை நண்பனாக மட்டுமே வருகிறார்.

நித்யா மேனனின் அம்மாவாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அப்பாவாக மனோ இந்த இருவரும் நடிப்பில் நம்மை கவர்கிறார்கள் அதேபோல ஜான் கொக்கின் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் அடுத்த பலம் ஏ ஆர் ரகுமான் படம் வெளி வருவதற்கு முன்னே பாடல்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது அதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அமைந்துள்ளது அதேபோல பின்னணிசையிலும் அற்புதமான ஒரு பின்னணி இசை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் காதலிக்க நேரமில்லை பெண்ணின் சித்தாந்தம்.