full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கோப்ரா படத்தின் பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு

மில்லியனைக் கடந்து பார்க்கப்பட்டு வரும் கோப்ரா படத்தின் பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘கோப்ரா’ படத்தின் “தும்பி துள்ளல்” என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. வெளியான நிமிடத்தில் இருந்தே பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது. ஏ.ஆர் ரஹ்மானின் அற்புத இசையில் பாடல் எல்லோராலும் பாரட்டப்பெற்று  தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்னும் வெற்றிகரமாகப்  பார்க்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் இப்பாடலை நேற்று கண் பார்வையற்ற சிறுமி  சஹானா  கீ-போர்டில் மிக அழகாக வாசித்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். சஹானா பிறவியிலேயே கண்பார்வையற்ற சிறுமி. அவர் ஜீ தமிழ் சேனலில் சரிகமபா நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்தவர். அவரின் கீ-போர்டில் வாசித்த பாடல் வந்த சற்று நேரத்திலேயே எல்லாராலும் பாரட்டப்பெற்று பகிரப்பட்டது. அதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. நேற்று இரவு சஹானாவின் வீடியோவை கவனித்த ஏ.ஆர் ரஹ்மான் ட்விட்டரில் ஸ்வீட் என ரீ ட்வீட் செய்து பாராட்டியிருந்தார்.

உடனே படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தன் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாகவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சார்பாகவும்  சிறுமி சஹானாவிற்கு விலை உயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டுடியோ செட்டப்பை பரிசாக கொடுத்து மகிழ்வித்துள்ளார்.