full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பெற்றோர் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்த விஜய்

தமிழ்ப்பட உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் விஜய்யின் தலைவா, அஜித்தின் கிரீடம், விக்ரமின் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யாவை வைத்து மதராச பட்டினம், ஜெயம் ரவியின் வனமகன் மற்றும் சைவம், இது என்ன மயக்கம், தேவி, தியா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இப்போது பிரபுதேவா நடிக்கும் லட்சுமி, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் ஆகிய படங்களை டைரக்டு செய்து வருகிறார். விஜய்க்கும் பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து 2014-ல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரண்டு வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

பிரிவு குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது, “நம்பிக்கை, நேர்மை இல்லாது வாழ்வதில் பயன் இல்லை. எங்கள் பிரிவுக்கு இதுவே காரணம். இயல்பாகவே சமுதாயத்தின் மீதும் பெண்கள் மீதும் அதிக அக்கறை கொண்டவன் நான். எனது இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெண்களின் சுயமரியாதையை பிரதிபலித்தன.” என்றார்.

பின்னர் இருவரும் சுமூகமாக பேசி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் விவாகரத்து செய்து கொண்டார்கள். அமலாபால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

விஜய்க்கு 2-வது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் விரும்பினர். அதற்கு இத்தனை நாட்களாக மறுத்து வந்த இயக்குனர் விஜய் இப்போது சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

மணப்பெண்ணை தேர்வு செய்யும் படலம் தீவிரமாக நடக்கிறது. விஜய்க்கு விரைவில் 2-வது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்பாக அவர் கைவசம் உள்ள 2 படங்களையும் வேகமாக முடிக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்.