full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தைரியமாக சொல்லப்படாத கதை – ‘எ ஸ்டோரி’!

சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும் காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி.

அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.. நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் நிமேஷ் ‘மல்லி’ என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அப்பு மூவிஸ்’ நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த கதம் கதம் மற்றும் இட்லி ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ‘அப்பு மூவிஸ்’ எனும் யுடியூப் சேனலை தொடங்கி, தமிழ் சினிமாவின் வியாபாரம் பற்றிய தகவல்களை இயக்குனர் கேபிள் சங்கர் அவர்கள் மூலம் அளித்திருந்தனர். இந்த சேனலின் கிரியேட்டிவ் ஹெட் – கேபிள் சங்கர். அதுமட்டுமில்லாமல் ஜோதிடம், ஸ்டாண்டப் காமெடி, ஷாட் பிலிம்ஸ், சமையல் நிகழ்ச்சிகள் என பலவிதமான விடீயோக்களை அளித்திருந்தனர். தற்போது முதன் முறையாக ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற இந்த வெப் சீரிஸை தயாரிக்கின்றனர்.

இந்த வெப் சீரிஸிற்கு ஹரி இசையமைத்துள்ளார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, பிரவீன் பாஸ்கர் என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார். திலக் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.

’பெண் என்பவள் கடவுள் வரைந்ததிலேயே அழகான ஓவியம்’, ‘செக்ஸ் என்பது கலை’ மற்றும் ‘தைரியமான … சொல்லப்படாத கதை’ என அடுத்தடுத்து இதன் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், நேற்று வெளியான டிரைலரும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் ‘எ ஸ்டோரி’ (A Story) வெப் சீரிஸ் ‘அப்பு மூவிஸ்’ யுடியூப் சேனலில் வெளியாகவிருக்கிறது.