நடிகர் | சந்தானம் |
நடிகை | தாரா அலிசா பெர்ரி |
இயக்குனர் | ஜான்சன் கே |
இசை | சந்தோஷ் நாராயணன் |
ஓளிப்பதிவு | கோபி ஜெகதீஷ்வரன் |
ஹீரோ சந்தானம் சென்னை லோக்கல் ஏரியாவைச் சேர்ந்த வாலிபன்…
நாயகி, தாரா அக்கிரஹாரத்து பெண்… இருவருக்கும் காதல் வளர, வழக்கம் போல், ஜாதி, சம்பிரதாயங்களை கூறி நாயகியின் தந்தை ஹீரோவை ரிஜெக்ட் செய்கிறார்.
இதனால், ஹீரோ ஹீரொயினிடம் அவரது தந்தையை பற்றி அவதூறாக பேச, கோபமடைந்த நாயகி, ‘ என் அப்பா மிகவும் நல்லவர்.அவர் மீது ஏதாவது ஒரு தப்பை நீ கண்டுபிடித்தால், உன்னை நான் திருமணம் செய்கிறேன்.’ என்று கூறிவிடுகிறார்.
அதன்பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை….
நாயகன் சந்தானம், வழக்கம் போல் தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். உடனிருக்கும் நண்பர்களுக்கும் அதிகப்படியாக நடிக்க வாய்ப்பு கொடுத்து காமெடியில் ஸ்கோர் செய்ய வைத்திருக்கிறார்.
நாயகி தாரா அலிசா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். தன் பங்குக்கு வந்து செல்லாமல், கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். சந்தானம் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள். சந்தானத்தின் நண்பர்களாக வரும் மூன்று பேரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
எளிமையான கதையை காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான்சன். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களை அழகாக கையாண்டிருக்கிறார். காமெடியை மட்டுமே முன்னிருத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறார் ஜான்சன்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஏ 1’ காமெடி கலாட்டா.