full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம் ” தீராப்பகை”

ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம்
” தீராப்பகை”

 

விஜயராகவேந்த்ரா ஜோடியாக ஹரிப்ரியா!

சரக்கு பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்

ரசிகர்களால் பாராட்டப்பட்ட சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட மற்றும் இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக சமீபத்தில் வெளிவந்த ” நினைவெல்லாம் நீயடா” ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தற்போது தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் பட நிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ” தீராப்பகை”.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற இவர் தமிழில் “கேஸ் நம்பர் 13″, ” ஜோக் 101″ உட்பட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹரிப்ரியா நாயகியாக நடித்திருக்கிறார். நடிப்பிலும் கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறார் ஹரிப்ரியா.
பிரம்மாண்டமான பார் செட்டில் படமாக்கப்பட்டுள்ள சரக்கு பாடலுக்கு பிரபல நடிகை மேக்னா நாயுடு படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

இவர்களுடன் ஐஸ்வர்யா ஷிந்தோகி, விஷால் ஹெக்டே, ரங்கா, ரஞ்சன் குமார், ஆத்ரிகா ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ராஜேஷ் கே நாராயண் மாறுபட்ட கோணங்களில் மிரட்டியிருக்கிறார்.

‘சிலந்தி’ மற்றும் சில தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு இசையமைத்த எம்.ஜி. கார்த்திக், இயக்குநருடன் மீண்டும் இணைந்து பின்னணி இசையமைப்பிலும் பாடல்களிலும் மேஜிக்கை உருவாக்கியுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ‘கேஜிஎஃப்’ புகழ் எடிட்டர் ஸ்ரீகாந்த் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்திருக்கிறார்.
ஐ.ராதிகா மற்றும் கலைகுமார் நடனக் காட்சிகளை அமைக்க, மாஸ் மாதா ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
பிரபாஸின் பிரமாண்ட படைப்பான “கல்கி 2898′ மோகன்லாலின் ‘மரைக்காயர்’ உட்பட பல பிரம்மாண்டமான படங்களுக்கு சவுண்ட் டிஸைன் செய்த எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் இந்தப் படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங்கை கையாள்கிறார்.
பாடல் வரிகளை சினேகன் மற்றும் ஆதிராஜன் எழுதியுள்ளனர்.
தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் கலசா ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தயாரிப்பு: டி.ஆதிராஜன், இனண தயாரிப்பு: ஏ. சூர்யா. மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

“சென்னை, பெங்களூர், கோவை, என பல இடங்களில் ஒரே மாதிரியான முறையில் இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இது கொலையா, தற்கொலையா அல்லது அமானுஷ்ய விஷயமா என்ற முடிவுக்கு வர முடியாமல் திணறுகிறது காவல் துறை. விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், அதிர்ச்சியூட்டும் மர்மம் அவிழ்கிறது. அதீத சுதந்திரத்தாலும் நாகரீக மோகத்தாலும் பெண்கள் சிக்கலில் மாட்டுவதைக் கருவாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் யாராலும் யூகிக்க முடியாது. அதேபோல சுவாரஸ்யமான காதல் காட்சிகளும்
இந்தப் படத்தின் பலம். படப்பிடிப்புக்கு ஆறு டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, பெங்களூர், மைசூர், கோவா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. த்ரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு முழுமையான விருந்தாக இருக்கும்”
என்கிறார், டைரக்டர் ஆதிராஜன்.