ஒரு திரைப்படம் எடுத்து வெளியிடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை இப்போதெல்லாம். அதுவும் உண்மையான வரலாற்றை படமாக எடுக்க நினைத்தால், அவ்வளவு தான் முடிந்தது கதை.
சமீபத்தில் மெர்சல், பத்மாவதி என சர்ச்சைகள் தீயாய் பரவியது. அதிலும் பத்மாவதி ஒருபடி மேலே போய், பல மாநில அரசுகளே தடை செய்யும் அளவிற்குப் போனது.
இந்த வரிசையில் ஒரு மலையாளப் படமும் இணைந்திருக்கிறது. இயக்குனர் கமல் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் “ஆமி” படத்திற்கு எதிராக கேரள உயர்நீதி மன்றத்தில் கே.பி.ராமச்சந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “ஆமி” திரைப்படம் “லவ் ஜிகாத்” நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், அதனை நியாயப்படுத்துவது போலவும் படமாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் மலையாளக் கவிஞர் கமலா சூரய்யாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.