கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கவுதம புத்தநகர் மாவட்டம் நொய்டா பகுதியைச் சேர்ந்த டாக்டர் தம்பதியினர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர். இவர்களது 14 வயது மகள் ஆருஷி மற்றும் வீட்டு வேலையாள், ஹேம்ராஜ், 45, ஆகியோர், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து, ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாட்டை உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கினை சிபிஐ விசாரணை நடத்தியது. இதில் கொலையை திட்டமிட்டு செய்ததாக ஆருஷியின் தந்தையான பல் டாக்டர் ராஜேஷ் தல்வார், தாயார் நுபுர் தல்வார் ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு கோர்ட் 2013-ல் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தண்டனையை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்து வரும் அப்பீல் வழக்கின் விசாரணையில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியது.
அலகாபாத் ஐகோர்ட், ஆருஷியை கொலை செய்தது பெற்றோர்கள் தான் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என அவர்களை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.