விழா மேடைகளில் விவசாயிகள் நலன் இது அபிசரவணன் ஸ்டைல்

News
0
(0)

நடிகர் அபி சரவணன் – நடிகை காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள ‘இவன் ஏடாகூடமானவன்’ படத்தின் பாடல் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. பொதுவாக அனைத்து இசை வெளியீடுகளிலும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடுவார்கள். ஆனால் இதில் சற்று மாறுபட்டு படத்தில் நடித்துள்ள நடிகர்களின் பெற்றோர்கள் பாடல்களை வெளியிட பிள்ளைகள் பெற்று கொண்டார்கள்.

அந்த வகையில் நடிகர் அபிசரவணன் பேசும் போது, எனது தந்தை ராஜேந்திரபாண்டியன், தாயார் பிரேமகலாவதி ஆகியோரால் இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்காக தன்னால் இயன்ற உதவிகளை அவ்வப்போது செய்துவருகிறார் அபிசரவணன். பெரும்பாலும் தான் கலந்துகொள்கின்ற அல்லது நெருக்கமான திரையுலக நண்பர்களின் திரைப்பட இசைவிழா மேடைகளை இப்படிப்பட்ட உதவிகளை வழங்குவதற்காக பயன்படுத்திக்கொள்கிறார் அபிசரவணன்.

அந்தவகையில் ‘இவன் ஏடாகூடமானவன்’ பட இசைவெளியீட்டு விழாவில், டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி செல்வராஜ் என்பவருக்கு அவர் மீண்டும் விவசாயத்தில் இறங்க, உதவிசெய்யும் வகையில் அவரது நிலத்தில் போர்வெல் கிணறு மூலம் தண்ணீர் எடுப்பதற்கு தேவையான நிதியுதவியை தானும் தனது நண்பர்கள் மூலமாகவும் சேர்ந்து திரட்டி வழங்கினார்.

அதேபோல ‘கேர் அண்ட் வெல்பேர்’ ஐ சேர்ந்த சிவகுமார் என்பவர் திருவள்ளூரைச் சேர்ந்த நித்யஸ்ரீ என்ற சிறுமியின் கடந்த இரு வருட படிப்பு செலவை செய்து வந்தாகவும் இந்த வருடம் எட்டாம் வகுப்பு படிக்க கட்டணம் செலுத்த இயலவில்லை எனவும் முகநூலில் பதிவிட்டு இருந்தார்.

இந்த தகவலை அறிந்ததும் டிராவல்ஸ் உரிமையாளர் அம்ஷத்கான் மற்றும் சரவணன் ஆகிய உதவும் உள்ளங்களிடம் இந்த விஷயத்தை கூறிய அபி சரவணன் அவர்கள் மூலமாக ஒரு தொகையை ஏற்பாடு செய்து சிறுமியின் இந்தாண்டுக்கான கல்விக்கடடணத்தை இந்த விழாவில் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். டிராவல்ஸ் உரிமையாளர் அம்ஷத்கான் வர இயலாத காரணத்தினால் யோகி கரங்களால் உதவி ஒப்படைக்கப்பட்டது.

இதே விழாவில், வீரமங்கை ராணி அவர்களின் வாழ்க்கை போராட்டத்தில் சிறிய உதவியாக அபிசரவணனின் தாயார் பிரேமகலாவதியும், சகோதரி சோனியா மற்றும் பொன் விமலா ஆகியோர் கரங்களால் ராணிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.