full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஐஸ்வர்யா ராயுடன் தகராறு குறித்து அபிஷேக் பச்சன்

காதல் திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இப்போது ஐஸ்வர்யாராய் அதிக படங்களில் நடித்து வருகிறார். அபிஷேக் பச்சனுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது. இருவருக்கும் சமீப காலமாக நல்ல புரிதல் இல்லை என்றும், வீட்டில் தனித்தனியாக வசிக்கிறார்கள் என்றும் தகவல்கள் வந்தன.

ஐஸ்வர்யாராயுடன், மாமியார் ஜெயாபச்சனும் அடிக்கடி தகராறு செய்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் கைகோர்த்தபடி ஜோடியாக கலந்துகொண்டு எங்களுக்குள் தகராறு எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் குழந்தை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க தயங்கியதாக அபிஷேக் பச்சன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ஆரத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய்க்கு சினிமாவில் தொடர முடியுமா என்ற தயக்கம் ஏற்பட்டது. முன்பு போல் என்னால் மீண்டும் நடிக்க முடியுமா? ஏற்கனவே விட்ட இடத்தை திரும்பவும் பிடிக்க முடியுமா? பாராட்டுகள் கிடைக்குமா என்றெல்லாம் சந்தேகங்களை கிளப்பினார். நான் இரண்டு ஆண்டுகள் நடிக்காமல் இருந்தேன். ஐஸ்வர்யா ராயும், எனது பெற்றோர்களும் எனது உணர்வுகளை புரிந்துகொண்டு ஆதரவாக இருந்தார்கள்.” என்று கூறினார்.