அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். உலகளவில் பல படங்களும் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், ஆஸ்கர் விருதை வென்ற படங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் த ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது
கிறிஸ்டோபர் நோலனின் டங்கிர்க் படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல் பிளேட் ரன்னர் 2049, டார்க்கஸ்ட் ஹார், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி உள்ளிட்ட படங்கள் தலா 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன.
ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:
சிறந்த படம் – த ஷேப் ஆப் வாட்டர்
சிறந்த நடிகர் – கேரி ஓல்டுமேன் (டார்க்ஸ்ட் ஹார்)
சிறந்த நடிகை – பிரான்சஸ் மிக்டார்மண்ட் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)
சிறந்த இயக்கம் – கில்லர்மோ டெல் டோரோ (த ஷேப் ஆப் வாட்டர்)
சிறந்த பாடல் – கோகோ (ரிமம்பர் மி)
சிறந்த இசை – த ஷேப் ஆப் வாட்டர் (அலெக்சாண்ட்ரே டெஸ்ப்லெட்)
சிறந்த ஒளிப்பதிவு – பிளேட் ரன்னர் 2049 (ரோஜர் ஏ.டெக்கின்ஸ்)
சிறந்த திரைக்கதை – கெட் அவுட் (ஜோர்டன் பீல்)
சிறந்த தழுவல் திரைக்கதை – கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் இவோரி)
சிறந்த லைவ் ஆக்ஷன் திரைப்படம் – த சைலன்ட் சைல்ட் (கிறிஸ் ஓவர்டன், ராச்சல் ஷென்டன்)
சிறந்த ஆவண குறும்படம் – ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் த 405 (ப்ராங்க் ஸ்டிப்பெல்)
சிறந்த படத்தொகுப்பு – டங்கிர்க் (லீ ஸ்மித்)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – பிளேட் ரன்னர் 2049 (ஜான் நெல்சன், கெர்டு நெஃப்சர், பால் லாம்பர்ட் மற்றும் ரிச்சர்ட் ஆர்.ஹுவர்)
சிறந்த துணை நடிகர் – சாம் ராக்வெல் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)
சிறந்த துணை நடிகை – ஆலிசன் ஜேனி (ஐ, டோன்யா)
சிறந்த வெளிநாட்டு படம் – எ பென்டாஸ்டிக் வுமன் (சிலி)
சிறந்த அனிமேஷன் படம் – கோகோ (லீ அன்கிர்ச், டார்லா கே.ஆன்டர்சன்)
சிறந்த அனிமேஷன் குறும்படம் – டியர் பாஸ்கட்பால் (க்ளென் கீன், கோப் ப்ரயண்ட்)
தயாரிப்பு வடிவமைப்பு – தி ஷேப் ஆஃப் வாட்டர்
ஒலித்தொகுப்பு – டங்கிர்க் (ரிச்சர்டு கிங், அலெக்ஸ் கிப்சன்)
ஒலி இணைப்பு – டங்கிர்க் (கடரெக், க்ரே, மார்க்)
சிறந்த ஆவணப்படம் – ஐகரஸ் (பிரயன் போகல், டேன் கோகன்)