full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகர் ஆரி தனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளார்

மதிப்பிற்குரிய  பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் வானொலி நண்பர்களுக்கும் மற்றும் என் நல விரும்பிகளுக்கும் வணக்கம் நான்  உங்கள் ஆரி.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் இன்றுவரை  பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும் அன்பும் தான், அதை நான் என்றும் மறவேன்.
இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன். எனவே இனிவரும் காலங்களில் தாங்கள் என் சம்பந்தமாக செய்தியை வெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புத்தாண்டில் உங்கள்  கனவுகள் அனைத்தும் நிறைவேற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் ஆரி அருஜுனா..

HAPPY NEW YEAR 2020😍