இன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்

News
 
 
 
 சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தனது பங்களிப்பை அளித்து வரும் ஆரி, ‘அலேகா’  படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்த ஆரி, புல்வாமா பகுதியில் மத்திய சேமக் காவல் படை வீரர்கள் காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் சென்றுகொண்டிருந்த மத்திய சேமக் காவல் படை வீரர்கள் மீது  பாகிஸ்தானின் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில்  46 வீரர்கள்  பலியானதையறிந்து பாகிஸ்தானின் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி மற்றும் அலேகா படக்குழுவினர்  கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
மேலும், மதத்  தீவிரவாதத்தை அழிப்போம்; இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை இந்தியர்களாகிய நாம் ஒன்றிணைந்து ஒழிப்போம்; 
 
உடலை மண்ணுக்கும் உயிரை இந்திய மக்களுக்கும் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு எங்களின் வீரவணக்கம்.
 
மேலும், காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
 
இப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ்-ன் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ்-ன் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். ‘அய்யனார்’ புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். இசை – சத்யா, ஒளிப்பதிவு – தில் ராஜ், படத்தொகுப்பு – கார்த்திக் ராம், பாடல்கள் – யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன்.