full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்ற நடிகர் ஜெய்

கடந்த 21ம் தேதி அடையாறு அருகில் வாகன சோதனையின் போது குடி போதையில் வாகனம் ஓட்டி வந்ததாக நடிகர் ஜெய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரனை கடந்த 5ம் தேதியன்று விசாரணைக்கு வந்த போது நடிகர் ஜெய் நேரில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த முறை நேரில் ஆஜரான ஜெய், தான் வாகனம் ஓட்டி வந்த போது மது அருந்தி இருந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதன் அடிப்படையில் அவருக்கு ஆறு மாதங்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தடையும், ரூபாய் 5200 அபராதமும் விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மேலும் அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்திருக்கிறது.