full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகர் கார்த்தியின் புதிய ஆசை!!

“2D என்டர்டேயின்மென்ட்” சார்பாக சூர்யா தயாரித்திருக்கும் படம் “கடைக்குட்டி சிங்கம்”. கார்த்தி கதாநாயகனாகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக சாயிஷா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் சத்யராஜ், சௌந்தரராஜா ஆகியோரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்>

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , “2டி எண்டர்டெயின்மென்ட்” இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் , இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் ரூபன் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும் போது,

“கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாக தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது. நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும்” என்றார்.