full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகர் ராதா ரவியின் மகனாக யோகிபாபு……..

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு நடித்து வர உருவாகி வருகிறது “தர்மபிரபு”.

எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருந்தார்கள்.முதல் கட்ட படப்பிடிப்பை இந்த தளத்தில் முடித்து விட்டு
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

இப்படத்தில் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் (SAM) ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

முழுநீள நகைச்சுவை படமாக உருவாகி வரும் இப்படத்தில், யோகிபாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். யுவபாரதி பாடல் வரிகளுக்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார்.

லோகேஷ் படத்தொகுப்பாளராகவும், பாலசந்தர் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள். பாலச்சந்தர் எமலோக தளம் அமைத்து ஏற்கனவே அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார். நிர்வாகத் தயாரிப்பு ராஜா செந்தில் மேற்கொள்கிறார். முத்துக்குமரன் இப்படத்தை இயக்க ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கிறார்.